Connect with us

Cinema News

ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்லாமா?…விஜயும் அஜித்தும் ஜாலியாக பேசும் வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் தற்போதைய இரு துருவங்கள் என்றால் அது விஜய் மற்றும் அஜித் தான். தமிழ் சினிமாவுக்கு எப்போதும் இந்த இருதுருவங்கள் கண்டிப்பாக வேண்டும். அப்படி இருந்தால், தான் இதில் யார் பெரியவர் என பார்த்து தியேட்டரில் கல்லா கட்ட முடியும். அடுத்தடுத்த மாஸ் திரைப்படங்களும் வெளியாகும்.

இது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், உண்மையில் அவர்களுக்குள், இந்த மாதிரியான எந்த போட்டியும் இல்லை என்பதே இந்த இருவரும் அவர்கள் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் அவ்வப்போது வெளியுலகத்திற்கு தெரியபடுத்தி வருகின்றனர்.

இந்த ஒற்றுமையை வெளிப்படுத்த ஒரு ரசிகர் , அஜித் விஜய் இருவரும் ஒன்றாக பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கலகலப்பாக எடிட் செய்து வெளியுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்களேன் – மிஷ்கினின் கடைசி கால ஆசையை பற்றி தெரியுமா.? கேட்டு ஷாக்கான ரசிகர்கள்.!

விஜய் அண்மையில் , பீஸ்ட் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் நெல்சன்உடன் நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் விஜய் பேசியதை மட்டும் வைத்துக்கொண்டு, எதிரே இந்த ரசிகர் குரல் மாற்றி அஜித் போல மிமிக்ரி செய்து, விடீயோவை எடிட் செய்து முடித்துள்ளார். அதில், பல கலகலப்பான கேள்விகளை கேட்டுக்கொண்டார். அதற்கேற்றவாறு பதிலும் விஜய் கூறியவாறு பார்த்து கொண்டார்.

இருவரும் இணைந்து எப்போ படம் பண்ணலாம் ப்ரோ என அஜித் கேட்பது போலவும், சீக்கிரமே என விஜய் சொல்வது என யார் மனதையும் புண்படுத்தாத வண்ணம் இந்த எடிட்டிங்கை செய்து முடித்தார் அந்த ரசிகர்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top