விஜய் வரலை.. அஜித் தான் வந்தாரு… ட்ரெண்ட்டின் புகைப்படத்தில் இத்தனை ஆச்சரிய தகவல் இருக்கா..!

Vijay Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் எப்போதுமே மோதிக்கொண்டு இருப்பது போல தான் சுற்றி வந்தனர். ஆனால் மங்காத்தா ஷூட்டிங்கில் அவர்கள் இருவரும் இணைந்து இருந்த ஒரு புகைப்படம் ரிலீஸாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அதன் பின்னர் வேறு ஒரு சுவாரஸ்ய தகவலும் இருக்கிறதாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித் ஆண்டி ஹீரோவாக நடித்து அசத்தி இருப்பார். இதே நேரத்தில் தான் விஜயும், இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடித்து வந்தார். இரண்டு ஷூட்டிங்கும் ஒரே ஸ்டுடியோவில் தான் நடந்ததாம். அப்போ ஒருமுறை அஜித்திடம் வந்த வெங்கட் பிரபு, அருகில் விஜய் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கு.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..
அவரை நேரில் சந்தித்து ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வரலாமா எனக் கேட்டு இருக்கிறார். ஆனால் கொஞ்சமும் அசராத அஜித் உடனே கிளம்பி அவருடன் சென்றுவிட்டாராம். அஜித் வந்தவுடன் வேலாயுதம் குழுவுக்கு உடனே பதறிவிட்டதாம். பின்னர் விஜய் கேரவனில் இருப்பதாக கூற நேராவே அவரை சென்று பார்த்து இருக்கிறார் அஜித்.
விஜயிற்கும் அஜித் வந்தது ஆச்சரியமான விஷயமாகவே இருந்து இருக்கிறது. என்னவென்று விசாரிக்க வெங்கட் பிரபு போட்டோ எடுக்க ஆசைப்பட்டதாக கூறினாராம். ஆனால் வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜயை வைத்தே போட்டோ எடுக்க ஆசைப்பட்டாராம். ஆனால் அஜித் இப்படி சொன்னதும் அவரும் ஜாலி ஆகிவிட்டாராம். பின்னரே அந்த வேலாயுதம் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே துரத்திய உறவினர்!.. நடுத்தெருவில் நின்ற ஜெயலலிதா.. காப்பாற்றிய எம்.ஜி.ஆர்..
இதனையடுத்தே அஜித்துக்கு வாட்ச் ஒன்றினை விஜய் பரிசாக கொடுத்திருப்பார். அதுவும் புகைப்படமாக வெளிவந்தது. அந்த வாட்சை மங்காத்தா படத்திலே அஜித் அணிந்து நடித்தாராம். மேலும் அப்போ அஜித் இயக்குனராக இருந்த வெங்கட் பிரபு தற்போது விஜயின் தளபதி68 படத்தினை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.