சொன்னதும் அஜித்தும் விஜய் சேதுபதியும் ஓடி வந்தாங்க.. அந்த மனசுதான் சார் கடவுள்! பிரபலம் சொன்ன சீக்ரெட்

Published on: June 19, 2024
sethu
---Advertisement---

Ajith Vijay Sethupathi: சம்பாதிச்சு சம்பாதிச்சு என்னத்த கொண்டு போகப் போறோம் என்று சொல்வார்கள். போகும்போது நம்முடன் வருவது நாம் சேர்த்து வைத்த புண்ணியம் மட்டுமே என்றுதான் கூறுவார்கள் .அந்த வகையில் எல்லா துறைகளிலும் இருக்கும் சில முக்கிய பிரபலங்கள் சம்பாதிக்கிற பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இல்லாதவர்களுக்கு கொடுத்து அதன் மூலம் அவர்களுடைய சந்தோஷத்தையும் புண்ணியத்தையும் சேர்த்து வைத்து கொள்கிறார்கள்.

அதிலும் சினிமாவில் தான் கோடிக்கணக்கான அளவில் சம்பாதிக்க முடியும். அதுவும் அதிர்ஷ்டம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் பெரும் பணத்தை எடுக்க முடியும். அந்த வகையில் சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிற பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் என்ன என்று சொல்வதற்கு சில பேர் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஃபுல் பார்ட்டி மஜாவா இருந்த பிரேம்ஜி! திருமணத்திற்கு பிறகு எப்படி மாறிட்டாரு பாருங்க.. வைரலாகும் வீடியோ

கொடுப்பதற்கு பல பேர் இருக்கிறார்கள். சிலபேர் செய்கிற உதவிகள் வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் பப்ளிசிட்டி தேவையில்லை என்பதுதான். லாரன்ஸை எடுத்துக் கொண்டால் அவர் செய்கிற உதவிகள் ஏராளமானது. அதை பப்ளிசிட்டியும் செய்து விடுகிறார். அதன் மூலமாவது யாராவது உதவிகளை செய்ய முன்வருவார்கள் என்ற ஒரு காரணத்தினால் தான் பப்ளிசிட்டி செய்கிறார்.

இதில் அஜித்தை பற்றி தான் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அஜித் யாருக்கு உதவி செய்தார் /இதுவரை அவர் செய்த உதவிகளை லிஸ்ட் போட்டு காட்ட சொல்லுங்கள் பார்ப்போம் என்றெல்லாம் பல விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஆனால் இதுவரை அஜித் செய்த உதவிகளை லிஸ்ட் போட்டே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: மோகன்லால் பலமுறை சொல்லியும் கேட்காத விஜய்!.. கோபத்தில் பேசாமல் போன நடிகர்!..

ஆனால் அதை வெளியில் சொல்லக்கூடாது என்ற கண்டிஷன் போட்டே அந்த உதவிகளை செய்கிறார். இதில் சினிமா பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் ஆர் எஸ் கார்த்திக் அஜித்தை பற்றியும் விஜய் சேதுபதியை பற்றியும் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் விஜய் சேதுபதி சினிமா பத்திரிகையாளர் சங்கத்திற்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்கிறாராம்.

அதைப்போல அஜித்தும்  அந்த சங்கத்திற்கு தேவையான பண உதவிகளை செய்து இருக்கிறாராம். ஏராளமான நடிகர்கள் பண உதவிகளை செய்திருந்தாலும் அஜித் செய்தது கேட்டதற்கும் மேலாக அதிகமாக இருந்தது என கூறினார்.  அஜித் இந்த அளவுக்கு எங்களுக்கு உதவி செய்வார் என எதிர்பார்க்கவில்லை. அவர் கொடுத்த அந்த பணம் மற்ற நடிகர்கள் கொடுத்ததை விட அதிகமாகும். கொரோனா காலகட்டத்தில் விஜய் சேதுபதியும் அஜித்தும் இல்லை என்றால் எங்கள் பாடே  திண்டாட்டமாக போயிருக்கும் என ஆர் எஸ் கார்த்திக் மகாராஜா படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ராமராஜன், மோகனை விட கவுண்டமணிக்கு தான் ரீ-என்ட்ரி சூப்பரா அமையப்போகுதா? அதையும் தான் பார்ப்போமே..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.