அஜித் ஸ்லிம்மா மாறினது இப்படித்தானாம்!.. ஃபேவரைட்டையே தியாகம் பன்ணிட்டாரே!..

Published on: December 13, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அஜித் என்றாலே அனைவருக்கும் பிடித்த விருப்பமான நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரை பார்க்க வேண்டுமென்றால் ஒரே வழி விமான நிலையம்தான்.

அதை தவிற வேறெந்த பொதுவெளியிலும் அஜித்தை பார்க்க முடியாத படி தனக்குள்ளே ஒரு வேலியை போட்டு வைத்திருக்கிறார் அஜித். அங்கு வைத்து எடுக்கும் புகைப்படங்கள்தான் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் கூட விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானுக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அஜித். அப்போது அங்கு இருந்தவர்கள் அஜித்தை பார்த்து மிகவும் பூரித்துப் போனார்கள்.

இதையும் படிங்க: ஆண்கள் தினம்னா இதுதான் மீம்ஸ்!.. கவுண்டமணியோட இந்த காட்சி உருவானது எப்படி தெரியுமா?…

சில பேர் கூட மட்டும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் அஜித். அந்த புகைப்படங்களில் அஜித் முன்பை விட தனது உடல் எடையை குறைத்தது போல் தெரிந்தது. ஆனால் உண்மையிலேயே உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறாராம் அஜித்.

அதற்காக ஒரு டெக்னிக்கையும் ஃபாலோ செய்கிறாராம். அதாவது அவர் அசைவ உணவுகளை உண்பதை தவிர்த்து வருகிறாராம்.  அதனால்தான் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு, இன்னமும் உடலை குறைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம். அதோடு, ரம்ஜான் என்றால் எப்படி பிரியாணி என சொல்கிறோமோ அதே போல் அஜித் என்றாலே பிரியாணி என்றுதான் பிரபலங்கள் பல பேட்டிகளில் கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க: என்ன சொன்னாலும் செஞ்சிரதுதானா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் விக்ரமை இப்படி ஆக்கிட்டாங்களே?

நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் வேலை செய்யும் அனைவருக்காகவும் அஜித் தானே பிரியாணி செய்து கொடுப்பது வழக்கம். ஆனால் இப்போது அசைவ உணவுகளை தவிர்த்து வருவதால் பிரியாணிக்கு பதில் என்ன செய்து கொடுப்பார் என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.