டேய் அதுல அவர் மாஸ்டர்டா!. துபாயில் அஜித்துக்கு வச்ச டெஸ்ட்.. சக்சஸ் பண்ணி நண்பர்களுக்கு வைச்ச பார்ட்டி!..
நடிகர் அஜித் நன்றாக பைக் மற்றும் கார்களை ஓட்டுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல வருடங்களுக்கு முன்பு பைக் மற்றும் கார் ரேஸிலெல்லாம் அஜித் கலந்து கொண்டவர். சினிமாவில் கூட செம ஸ்டைலாக கார் மற்றும் பைக்கை ஓட்டு கைத்தட்டலை அள்ளுவார்.
சிறு வயது முதலே பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம், கொண்டவராகத்தான் அஜித் இருந்தார். அந்த ஆர்வம் இப்போதும் குறையவில்லை. விதவிதமான பி.எம்.டபிள்யூ பைக்களை வாங்கி வைத்திருக்கிறார். அதில்தான் இப்போது உலகையும் சுற்றி வருகிறார். இந்தியாவில் பயணத்தை முடித்துவிட்ட அஜித் உலக பயணத்தை துவங்கி சில நாடுகளில் வெற்றிகரமாக முடித்துவிட்டார்.
இதையும் படிங்க: அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!
விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தபின் மீண்டும் 11 மாதங்கள் பல நாடுகளிலும் பைக் ஓட்ட அஜித் முடிவெடுத்துள்ளார். தற்போது வயது காரணமாக அஜித் பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்வது கிடையாது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துபாயில் துவங்கவுள்ளது.
இந்த படத்திலும் நிறைய பைக் மற்றும் கார் ஓட்டும் காட்சிகள் வருகிறது. துபாய் சட்டப்படி லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே கார் ஓட்ட முடியும். அது கூட பரவாயில்லை. அங்கு கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. சோதனையில் சிறிய தவறு செய்தாலும் லைசென்ஸ் தரமாட்டார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் பைக் டூர்!.. திரும்பி வர பல மாசம் ஆகுமாம்!… ரசிகர்களை பற்றி கவலைப்படாத அஜித்!…
சமீபத்தில் துபாய் கிளம்பிப்போன அஜித் அங்கு லைசென்ஸுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அஜித் பைக் ஓட்டுவதில் ஜித்தன். கார் ஓட்டுவதில் மாஸ்டர். ஆனால், சோதனையில் அவரை எட்டு போட சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டே அதை செய்து காட்டியுள்ளார் அஜித். அதோடு, அதை யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என நண்பர்களிடமும் சொல்லிவிட்டாராம். வெற்றிகரமாக சோதனையில் வெற்றிபெற்று லைசன்ஸை வாங்கிவிட்டார்.
இதில், அஜித்துக்கு மிகுந்த சந்தோஷமாம். எனவே, அந்த சந்தோஷத்தை நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் அஜித், தனுஷ் படம்! கைவிடப்பட்ட நிலையில் தூசி தட்டி மறுஜென்மம் கொடுத்த நம்ம மில்லர்