விஜய் வெற்றிக்கு பின்னாடி அஜித் கண்டிப்பா இருப்பார்! ஓ கதை இப்படி போகுதா? இயக்குனர் சொன்ன சீக்ரெட்

Published on: March 13, 2024
ajith
---Advertisement---

Ajith Vijay: தமிழ் சினிமாவில் இருபெரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருக்கும் உண்டான அந்த போட்டி மறைந்து இப்போது அவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். அஜித் அப்பா மறைவிற்கு முதல் ஆளாக சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறியவர் விஜய்.

அதே போல் சமீபத்தில் அஜித்தின் உடல் நலம் குறித்து விஜய் தொலைபேசியில் கேட்டு அறிந்து கொண்டது இன்னும் அவர்களுக்கிடையே இருந்த நட்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விஜயின் அரசியலில் அஜித் எதுவும் மறைமுகமாக இருந்து உதவி செய்வாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் இருக்கின்றது.

இதையும் படிங்க: லவ்வர் படத்துக்கு கூட அது நடந்துடுச்சு!.. ரஜினியோட லால் சலாம் படத்துக்கு இன்னும் நடக்கலையே!..

இதைப் பற்றி பிரபல சினிமா இயக்குனர் பிரவீன் காந்தி பல தகவல்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது தமிழகத்திற்கு விஜயம் கண்டிப்பாக விஜயின் மூலமாகத்தான் கிடைக்கப் போகிறது என கூறிய பிரவீன் காந்தி உண்மையிலேயே விஜய் கலெக்‌ஷன் கிங் என அரசியலிலும் நிருபித்துவிட்டார் என கூறினார்.

அதாவது தான் ஆரம்பித்த செயலி மூலம் இரண்டே நாள்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களை தனதாக்கி கொண்டார் விஜய். இதுவே மாபெரும் வெற்றி என பிரவீன் காந்தி கூறினார். மேலும் விஜயின் வெற்றிக்கு தடையாக கமலும் செயல்படுவார், அதனால்தான் கமல் ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இதுவே விஜயின் வெற்றியை உடைக்க கமல் போட்ட சதி என்றும் பிரவீன் காந்தி கூறினார்.

இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளரை மொட்டை அடிக்க வைத்த விக்ரம் படம்!… அடப்பாவமே…

மேலும் விஜயின் வெற்றிக்கு கண்டிப்பாக அஜித் ரசிகர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்றும் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாலும் விஜயின் வெற்றிக்கு அஜித் உறுதுணையாக இருப்பார் என்றும் பிரவீன் காந்தி கூறினார். மேலும் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் உட்காருகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சிதான் என்றும் பிரவீன் காந்தி கூறினார்.

ஏனெனில் விஜயை இப்படிப் பார்க்கத்தான் எஸ்.ஏ.சி ஆசைப்பட்டார். அதனால் விஜயின் வெற்றிக்கு அவருடைய தந்தையும் அஜித்தும் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்கள் என்றும் பிரவீன் காந்தி கூறினார்.

இதையும் படிங்க: ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு.. தியாகராஜன் சொன்ன பகீர் தகவல்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.