இன்னைக்கும் ஆணழகன்னா அது அஜித்தான்!.. ஆஃப்லைன் லுக்ல யாரு பெஸ்ட்டு பாருங்க.. முற்றிய சண்டை!..

by Saranya M |   ( Updated:2024-04-19 19:30:43  )
இன்னைக்கும் ஆணழகன்னா அது அஜித்தான்!.. ஆஃப்லைன் லுக்ல யாரு பெஸ்ட்டு பாருங்க.. முற்றிய சண்டை!..
X

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டு சென்றனர். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தாலும் அது எல்லாம் ரத்து செய்துவிட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்ற நடிகர் விஜய் ரஷ்யாவிலிருந்து சென்னைக்கு வந்து வந்த உடனே உடனடியாக நீலாங்கரையில் உள்ள தனது வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் காலை 7:00 மணிக்கு சார்பாக தேர்தல் தொடங்கியதுமே தனது வாக்கை செலுத்தி விட்டு சென்றார். நடிகர் அஜித், ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு ஓட்டுப்போட்டனர்.

இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான அந்த ரெண்டு நடிகைகள்!.. யாருன்னு தெரியுமா?..

இந்நிலையில் ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் ஆஃப்லைன் லுக்கை கம்பேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் ரொம்பவே பலவீனமாக இருக்கிறார் என்றும் அஜித் இந்த வயதிலும் சும்மா கெத்தாக வந்து கண்ணாடி எல்லாம் வாழ்ந்து கொண்டு செம மாஸாக ஓட்டுப்போட்டு சென்றார் என அஜித் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.

இருவரையும் விட சூர்யாதான் சூப்பர். அந்த கண்ணாடியை கழட்டி விட்டால் அஜித்தின் கண்கள் எல்லாம் ரொம்பவே பரிதாபமாக உள்ளது. அதை மறைக்கத்தான் கூலர்ஸ் அணிந்து கொண்டு வந்திருக்கிறார் என சூர்யா ரசிகர்கள் இன்னொரு பக்கம் பஞ்சாயத்தை கூட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே பாடலில் நால்வகை சுவை… நாலு பேரும் போட்டா போட்டி… பாடல் இதுதாங்க!..

தேர்தல் நேற்று நடைபெற்று நல்லபடியாக முடிந்த நிலையில் விடாமுயற்சியின் படப்பிடிப்புக்காக நடிகர் அஜித்தின் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல நடிகர் விஜய் மீண்டும் கோட் படத்தின் இறுதிகட்ட படிப்பிற்காக ரஷ்யா செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த வரும் கோட் படம் வெளியாக உள்ளது. ஆனால் இதுவரை அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. சூர்யாவின் கங்குவா ரிலீஸ் பற்றியும் தெரியவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் ரஜினியும் கமலும் ஒரே படத்தில் நடித்தால்? வெளியான ஷாக்கிங் தகவல்.. அட அவரே சொல்லியிருக்காரு

Next Story