அடேங்கப்பா!.. அஜித் தெறி மாஸா இருக்காரே!.. கார் அருகே என்னம்மா போஸ் கொடுத்து நிக்கிறாரு ஏகே!..

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் கிளம்பி சென்றுள்ளார். இந்நிலையில், லேட்டஸ்டாக அவர் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

காரில் ஏறுவது போல செம மாஸாக நடிகர் அஜித்குமார் போஸ் கொடுத்துள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் சுமார் 2 ஆண்டுகளாக விடாமுயற்சி திரைப்படம் விடாமுயற்சியுடன் உருவாகி வருகிறது.

இதையும் படிங்க: ‘கல்கி’யில் டம்மி பீஸா மாறிய கமல்! உலக நாயகனுக்கே இந்த நிலைமையா? இத செய்ய மறந்துட்டாங்களே

நிதி நெருக்கடியால் லைகா நிறுவனம் படாத பாடுபட்டு வரும் நிலையில், அஜித்துக்கான சம்பளத்தையும் படப்பிடிப்புக்கு தேவையான பட்ஜெட்டையும் ஒதுக்க முடியாமல் கடந்த 6 மாத காலம் படப்பிடிப்பை நடத்தாமல் அமைதி காத்து வந்த லைகா, அஜித்குமார் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், பதறி அடித்துக் கொண்டு மீண்டும் படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தை முடித்த பின்னர் தான் நடிகர் அர்ஜுன் தனது மகள் கல்யாணத்தை நடத்தலாம் என திட்டமிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!.. காசு எல்லாம் போச்சி!.. புலம்பும் நடிகர்!..

ஆனால், விடாமுயற்சி படப்பிடிப்பு தாமதமாகி வந்த நிலையில், தனது மகள் திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். அர்ஜுன் மகள் திருமணத்தில் கூட அஜித்குமார் பங்கேற்காமல் ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவை மட்டுமே அனுப்பி வைத்தார். திருப்பதி அருகே குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அதில் நடித்துக் கொண்டிருந்த அஜித் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

ஜூன் 20-ஆம் தேதி மீண்டும் அஜர்பைஜானுக்கு கிளம்பிச் சென்ற அஜித் குமார் ஒரே மூச்சில் இறுதி கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அஜித்குமார் லேட்டஸ்டாக எடுத்த கார் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: கடையை மூடும் லைகா!.. புது கம்பெனியை தேடி ஓடும் விஜய் மகன்!.. பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!..

 

Related Articles

Next Story