Connect with us
Thunivu

Cinema News

துணிவு படத்தில் அந்த காட்சியில் நடித்தது அஜித்தே இல்லையாம்!.. என்னப்பா சொல்றீங்க!..

சாக்லேட் பாயாக சினிமாவில் நடிக்க துவங்கி முன்னேறி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் அஜித் குமார். துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து வந்த இவர் அமர்க்களம் திரைப்படம் மூலம் ஆக்‌ஷன் படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் பில்லா, மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

இப்போது விஜய்க்கு போட்டியாக களத்தில் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வருகிற 4ம் தேதி அபர்பைசானில் துவங்கவுள்ளது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் ஒன்னா ஒரே நேரத்தில் விஜயும் அஜித்தும்! தல விரும்புவதும் அதுதானாம்!..

விடாமுயற்சி படத்திற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். ஒரு வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அஜித் எதற்காக அதை செய்கிறார், அதன் பின்னணியில் இருப்பது யார் என்பது போன்ற பல சுவாரஸ்யமான திரைக்கதையாக பண்ணியிருந்தார் ஹெச்.வினோத்.

வழக்கமான அஜித் படத்திலிருந்து விலகி முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படம் போன்ற கதை போல இப்படம் உருவாகியிருந்தது. கதாநாயகியுடன் டூயட் பாடி வந்த அஜித் இந்த படத்தில் ஜோடியாக இல்லாமல் நடித்திருந்தார். ஹாலிவுட்டில் வந்த ஜோக்கர் படம் போல சுவாரஸ்யமான டிவிஸ்ட்கள் இப்படத்தில் இருந்தது.

இதையும் படிங்க: பல மாசம் ஆகியும் கிளைமேக்ஸ் வரல!.. காக்க வைத்த இயக்குனர்!.. தூக்கியெறிந்த அஜித்!..

இந்நிலையில், துணிவு படத்தின் ஒரு காட்சியில் நடித்தது அஜித்தே இல்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் முகமுடி போட்டுக்கொண்டு அஜித் தன்னிடம் இருக்கும் பணத்தை மக்களிடம் கொடுப்பது போல ஒரு காட்சி வரும். ஆனால், உண்மையில் அந்த காட்சியில் நடித்தது அஜித்தே இல்லையாம். வேறு ஒருவரை வைத்துதான் அந்த காட்சியை எடுத்துள்ளனர்.

அது எப்படி அந்த காட்சி எடுக்கப்பட்ட அன்று அஜித் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியானபோதுதான் இது பலருக்கும் தெரியவந்தது. சினிமாவில் சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு பதில் வேறு ஒருவரை டூப் போட்டு எடுப்பார்கள். ஆனால், துணிவு படத்தில் அந்த காட்சியில் அஜித்துக்கு பதிலாக டூப் ஒருவரை வைத்து எடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  ஒருநாள் எல்லாரும் என்னை தேடி வருவாங்க!. அப்ப இருக்கு!.. சொன்னதை செய்து காட்டிய அஜித்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top