latest news

இது வேற லெவல் ஸ்வேக்.. சுட சுட அப்டேட்டை அள்ளிக் கொடுக்கும் தல! வைரலாகும் புகைப்படம்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். ஏராளமான ரசிகர்கள் படைபலத்துடன் உலா வரும் அஜித் இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அஜர்பைஜானில் கால நிலை மாற்றம் காரணமாக தற்காலிகமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரியில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதனால் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படக்குழுக்களும் சென்னை வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் மட்டும் […]

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். ஏராளமான ரசிகர்கள் படைபலத்துடன் உலா வரும் அஜித் இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் அஜர்பைஜானில் கால நிலை மாற்றம் காரணமாக தற்காலிகமாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அதனால் விடாமுயற்சி படத்தின் ஒட்டுமொத்த படக்குழுக்களும் சென்னை வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித் மட்டும் சென்னை திரும்ப வில்லை என்று சொல்லப்படுகிறது. கூடவே நடிகர் ஆரவும் அங்கேயே இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: பணத்தாசை பிடிச்ச இளையராஜா! மகள் கடைசி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த நிலையிலும் ஆசை விடலயே

ஏனெனில் சமீபகாலமாக அஜித்தும் ஆரவும் இணைந்து எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விடாமுயற்சி படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வராத நிலையில் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் மட்டும் நாளுக்கு நாள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ajith1
ajith1

ஆனால் வெளியாகும் ஒவ்வொரு புகைப்படத்திலும் அஜித்தின் மாஸ் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஒரு முறை டேவிட் பில்லா மாதிரியான கோட் சூட் அணிந்து பக்கா ஸ்டைலாக போஸ் கொடுத்திருந்தார் அஜித்.

இதையும் படிங்க: கோடிகளில் புரளும் விஜயிற்கு முதல் கார் கொடுத்த நடிகர் யார் தெரியுமா? அதுவும் அட்வான்ஸே இல்லாமல் தந்த ஆச்சரியம்

அடுத்ததாக என்னை அறிந்தால் லுக்கில் ஹேண்ட்ஸமாக இருந்தார். இந்த நிலையில் இன்றும் ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதில் அஜித்தும் ஆரவும் ரோட்டோரத்தில் நடந்து வரும் மாதிரியான போஸில் போஸ் கொடுத்திருக்கிறார்கள். அந்த புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இது வேற லெவல் ஸ்வேக்.. சுட சுட அப்டேட்டை அள்ளிக் கொடுக்கும் தல! வைரலாகும் புகைப்படம் | Cinereporters