விஜய் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்.!அடம் பிடித்த அஜித்.! பகீர் பின்னணி.!

by Manikandan |
விஜய் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்.!அடம் பிடித்த அஜித்.! பகீர் பின்னணி.!
X

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்த நாயகிகளில் ஒருவர் தேவயானி. இவரது கணவர் ராஜகுமாரன். இவர் ஒரு இயக்குனர். நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்றிலும் தேவயாணி ஹீரோயினாக நடித்திருப்பார். அப்போதே இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இயக்குனர் நடிகர் ராஜகுமாரன், சமீபத்தில் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அதில் நீ வருவாய் என படம் பற்றி குறிப்பிட்டார். அதாவது முதலில் அஜித் நடித்து இருந்த அந்த கௌரவ தோற்றத்தில் விஜய் தான் நடிக்க இருந்ததாம். ஆனால், ராஜகுமாரன் முதலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜயை அணுகியுள்ளார்.

இதையும் படியுங்களேன் - சிவகார்த்திகேயன் எனக்கு ஒரு அம்மா மாதிரி.! ‘விலங்கு’ நடிகரின் நெகிழ்ச்சி அனுபவம்.!

கதையை கேட்ட விஜய், அஜித் நடிக்கும் கதாபாத்திரம் கொடுங்கள் நான் நடிக்கிறேன். பார்த்திபன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க கேளுங்கள் என விஜய் கூறியுள்ளார். இதனை அஜித் மறுத்துள்ளார். பார்த்திபன் கதாபாத்திரம் கடைசி வரை ஹீரோயினை பின்தொடர்வது போலவும், கடைசி வரை பார்த்திபனை தேவயாணி அவரை காதலிக்க மாட்டார் என்பது போல இருக்கும். அதனால், அந்த கதாபாத்திரம் வேண்டாம். என அஜித் மறுத்துவிட்டாராம்.

பிறகு இறுதியில் விஜயை நடிக்க அணுகிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்து, அஜித் கவுரவ தோற்றத்தில் நடித்து, பின்னர், அப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story