Cinema History
அந்த ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் நடித்த அஜித்!.. அட இதெல்லாம் நமக்கு தெரியாம போச்சே!..
Actor Ajith : திரையுலகை பொறுத்தவரை சில கதைகள் மட்டுமே ஒரு நடிகருக்காக மட்டுமே உருவாக்கப்படும். அதில் அந்த நடிகர் நடித்தால் மட்டுமே பொறுத்தமாக இருக்கும். அதேநேரம், அந்த கதை வேறு ஒரு நடிகருக்கு போனால் அந்த நடிகருக்கு ஏற்றார் போல் கதையில் சில மாற்றங்களை இயக்குனர் செய்வார்.
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான எந்திரன் படம் கமலுக்காக எழுதப்பட்டது. அதேபோல், கமல் நடித்த இந்தியன் படத்தின் கதையை ரஜினியை நினைத்தே எழுதியிருந்தார் ஷங்கர். நடிகர்களின் கால்ஷீட்டில் சிக்கல் ஏற்படும் போது கதாநாயகர்கள் மாறிவிடுவார்கள். கதையும் மாறிவிடும்.
இதையும் படிங்க: அஜித் படத்தை இயக்க விஜயிடம் அனுமதி கேட்ட இயக்குனர்!. இப்படியெல்லாம் நடக்குமா?!…
முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டிய படம்தான் கஜினி. ஆனால், சூர்யா நடித்தார். நேருக்கு நேர் படத்தில் சில நாட்கள் நடித்துவிட்டு வெளியேறினார் அஜித். அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் சூர்யா. இப்படி பல கதைகள் பல நடிகர்களுக்கும் போகும். முதல்வன் படத்தில் ரஜினி நடிக்க முடியாது என சொல்லவே அர்ஜூன் நடித்தார்.
அவ்வளவு ஏன்?.. இப்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் கதையை அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி முதலில் விஜயிடம்தான் சொன்னார். விஜயும் நடிக்க சம்மதித்தார். ஆனால், அப்போது மகிழ் திருமேனியால் அப்படத்தை இயக்க முடியவில்லை. இப்போது அஜித்துக்கு ஏற்றார் போல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சொல்லாதத அஜித் என்கிட்ட சொன்னாரு! இவ்ளோ பர்ஷனல இப்படியா ஓப்பனா சொல்றது?
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த ரமேஷ் கண்ணா முதன் முதலில் இயக்கிய படம்தான் தொடரும். முதலில் இந்த படத்தில் ஜெயராம், மீனா ஆகியோர் நடிக்கவிருந்தனர். படப்பிடிப்புக்கு செல்ல தயாரானபோது பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஒரு வருடம் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
இந்த கதை அஜித்திடம் சொல்லப்பட்டு, அவருக்கு ஜோடியாக தேவயாணியை நடிக்க வைத்து இப்படம் வெளியானது. ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இதனால், ரமேஷ் கண்ணா இயக்கிய முதல் மற்றும் கடைசி படமாக தொடரும் படம் மாறிவிட்டது.
இதையும் படிங்க: கதையே இல்லாமல் அஜித்தை நடிக்க அழைத்த இயக்குனர்… சரியான பாடம் சொல்லி கொடுத்த தல…