More
Categories: Cinema News latest news

மன உளைச்சலில் இருந்த அஜித்! அதனால் வந்த பாதிப்புதான் இது.. அஜித்தின் உடல்நலம் பற்றி கூறிய நலம்விரும்பி

Actor Ajith: நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்து பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவசர அவசரமாக நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த அஜித் உடனடியாக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார் என்று நேற்றிலிருந்து இந்த தகவல் வேகமாக பரவி வருகின்றன.

திடீரென அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என ஊடகங்களும் அவரவர் தரப்பில் விசாரிக்க ஆரம்பித்தனர். அதில் பல்வேறு வதந்திகளும் சர்ச்சைகளும் கலந்தே செய்திகளாக வெளிவந்து கொண்டிருந்தன. அவருக்கு மூளையில் கட்டி இருந்ததாகவும் அதை நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அகற்றியதாகவும் ஒரு சிலர் கூறி வந்தனர்.

இதையும் படிங்க: இரண்டு பெயரை கொடுத்த சிவாஜி ராவ்… மறுத்த கே.பாலசந்தர்.. ரஜினிகாந்த் உருவானதன் பின்னணி?

அது மட்டும் இல்லாமல் மதுரை மற்றும் கேரளாவில் இருந்து அது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இந்த அறுவை சிகிச்சையை செய்ததாகவும் கூறினார்கள். இன்று மாலைக்குள் அஜித் வீடு திரும்ப உள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அஜித்திற்கு மிகவும் நெருக்கமானவரும் சினிமா பத்திரிகையாளருமான விகே சுந்தர் ஒரு பேட்டியில் உண்மையிலேயே அஜித்திற்கு என்ன நடந்தது. இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதை பற்றி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கமல், ரஜினியின் மாஸ் படங்களையே பின்னுக்குத் தள்ளிய விஜயகாந்த் படம்!.. கெத்து காட்டிய கேப்டன்!..

அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் பொழுது அதன் ஒளிப்பதிவாளர் மிலன் மரணம் அஜித்தை மிகவும் பாதித்தது என்றும் சமீபத்தில் அவருடைய நண்பரான வெற்றி துரைச்சாமியின் மறைவும் மேலும் அஜித்தை பாதித்தது என்றும் கூறிய சுந்தர் இந்த இரு சம்பவங்களால் அஜித் மிகவும் மன உளைச்சலில் இருந்தார் என்றும் கூறினார்.

இந்த நிலையில் அவருடைய உடலில் ஏதோ மாற்றம் தெரியவர அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு புறப்பட இருந்ததால் ஒரு உடல் பரிசோதனை செய்து கொள்வோம் என வழக்கம்போல மருத்துவமனைக்கு சென்ற அஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய காது நரம்பு வழியே ஒரு சிறிய பல்ஜ் இருந்ததாகவும் அதையே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளார்கள் என்றும் சுந்தர் கூறினார்.

இதையும் படிங்க: ஸ்ரீவித்யாவுடன் ரொமான்ஸ் செய்த ரஜினிகாந்த்… டப்பிங்கில் குழம்பிய ஆச்சரியம்!…

ஆனால் இதை வைத்து பல ஊடகங்கள் அஜித்தைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களை வெளியிட்டு அவருடைய ரசிகர்களையும் அஜித்தின் குடும்பத்தையும் வேதனைப்படுத்தி வருகிறார்கள் என்றும் சுந்தர் கூறினார்.

Published by
Rohini

Recent Posts