Cinema History
மணிரத்தினத்தை கடுப்பேற்றிய தல… நேருக்கு நேர்படத்தில் அஜித் to சூர்யா… அப்ப இதுதான் நடந்துச்சா…?
நேருக்கு நேர் திரைப்படத்தில் அஜித்துக்கு பதிலாக சூர்யா மாறியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் அறிமுகமாகி தற்போது டாப் நடிகராக வலம் வருபவர் அஜித். அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய அஜித். தற்போது தன்னுடைய 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகின்றார். 1995ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
இந்த திரைப்படத்தை வசந்த் இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்ததால் இயக்குனர் வசந்த் தான் அடுத்து எடுக்க இருந்த நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜய் மற்றும் அஜித் வைத்து இயக்குவதற்கு முடிவு செய்திருந்தார். இந்த திரைப்படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் அஜித் தொடர்பான காட்சிகள் கிட்டத்தட்ட 8 நாட்கள் எடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அஜித் விலகி அதற்கு பதிலாக சூர்யா நடித்து இந்த திரைப்படம் வெளியானது.
பலரும் இப்படத்தில் இருந்து அஜித் விலகியதற்கு அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை. மேலும் விஜய் அப்படத்தில் ஹீரோவாகவும் அவரது நண்பராக மட்டுமே அஜித் நடிக்க இருந்ததால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மை என்னவென்றால் ஒருமுறை மணிரத்தினம் அஜித்தை தன்னை வந்து பார்க்கும்படி அழைத்திருக்கின்றார். அதன்படி மதியம் ஒரு மணிக்கு வந்து விடுகிறேன் என்று அஜித் கூறி இருக்கின்றார்.
அன்றைய தினம் மணிரத்தினம் ஒரு மணி வரை காத்திருக்கின்றார். ஆனால் மணி 2 பின்னர் மூன்று மணி ஆன போதிலும் அஜித் மணிரத்தினத்தை சந்திக்க வரவில்லை. உடனே இயக்குனர் வசந்துக்கு போன் செய்த மணிரத்தினம் அப்படத்திலிருந்து அஜித்தை நீக்கி விடுங்கள் என்று கூறிவிட்டார்.
இதை கேட்டு ஷாக்கான வசந்த், ‘சார் ஏற்கனவே எட்டு நாள் படம் எடுக்கப்பட்டு விட்டது என்று கூற’ இப்படத்தின் தயாரிப்பாளர் நான் தானே எனக்கு தானே நஷ்டம் நான் தானே கூறுகிறேன் இப்படத்தில் இருந்து அவரை எடுத்து விடுங்கள் என்று தெரிவித்துவிட்டாராம். அதன் பிறகு சுகாசினி சிவகுமாரின் முதல் மகன் சரவணனை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று கூற அதன் பிறகு சிவகுமாரை அணுகி இருக்கிறார்கள்.
ஆனால் சிவகுமாரோ இப்போதுதான் அவன் வேலையில் சேர்ந்து இருக்கின்றான். அவன் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்று கூறிவிட்டு வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டாராம். பின்னர் மணிரத்தினம் கேட்டுக் கொண்டதன் பெயரில் சிவகுமார் அவரின் மூத்த மகன் சரவணன் நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார். அப்படி சரவணன் சூர்யாவாக மாறி நடித்த திரைப்படம் தான் நேருக்கு நேர். இந்த திரைப்படத்திலிருந்து அஜித் விலகுவதற்கு முக்கிய காரணம் மணிரத்தினம் தான். மேலும் நடிகர் சூர்யாவுக்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகமாகவும் இருந்தது என்று இயக்குனர் மணி பாரதி ஒரு நேர்காணலில் பேசி இருக்கின்றார்.