விடாமுயற்சிக்கு அஜித் வைத்த காலக்கெடு!.. அது நடக்கலனா நடக்க போவது இதுதான்!..
துணிவு படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அது டிராப் ஆனது. அதனாலேயே சில மாதங்கள் ஆனது. அதன்பின், தடம் பட இயக்குனர் மகிழ் திருமேனியை அழைத்து பேசினார்கள். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடிக்க அஜித்தும் ஓகே சொன்னார்.
அதன்பின், அந்த கதை பிடிக்காமல் ஒரு கொரியன் பட சிடியை கொடுத்து இந்த படம் போல் ஒரு கதையை உருவாக்குங்கள் என அஜித் சொன்னார். அதன்பின் அதுவும் கைவிடப்பட்டு மீண்டும் ஒரு புதியை கதையை உருவாக்கினார்கள். தற்போது அதுதான் உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு தினமும் லேட்டா வந்த பத்மினி!.. ஸ்ரீதர் செய்த தில்லாலங்கடி டெக்னிக்..
இதற்கிடையில் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டார். நார்வே உள்ளிட்ட சில நாடுகளில் பைக்கை ஓட்டி வந்தார். எனவே, அவருக்காக மகிழ் திருமேனி காத்திருந்தார். ஒருபக்கம், வருமான வரித்துறை லைக்கா நிறுவனத்தில் சோதனை நடத்தி அவர்களின் சில சொத்துக்களை முடக்கினார்கள்.
மேலும் இந்தியன் 2 மற்றும் ரஜினியின் அடுத்த படம் என லைக்கா பிஸியாக இருந்ததால் விடாமுயற்சிக்கு அவர்களால் பட்ஜெட் ஒதுக்கமுடியவில்லை. வலிமை படத்திற்கு வருடத்திற்கு மேல் காத்திருந்து பொறுமை இழந்து வலிமை அப்டேட் என எல்லா இடத்திலும் அப்டேட் கேட்டனர்.
இதையும் படிங்க: என்னை திட்டுனுவனுக்கெல்லாம் இருக்கு!. ரெடியா இருங்க!.. யாருன்னு காட்டுறேன்!.. வடிவேல் பேட்டி!…
ஆனால், விடாமுயற்சிக்கு அஜித் ரசிகர்களே அமைதியாக காத்திருக்கிறார்கள். அஜித் படம் என்றால் இப்படித்தான் என அவர்களே புரிந்துகொண்டார்கள் போல. செப்டம்பர் மாதம் கடைசி வாரம் துபாயில் படப்பிடிப்பை துவங்கி 2 மாதம் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடித்துவிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிகபட்சம் அக்டோபர் முதல் வாரம் காத்திருப்போம்.. இல்லையேல் விடாமுயற்சி படத்தை வேறு நிறுவனத்திற்கு கை மாத்திவிடுவோம் என அஜித் முடிவெடுத்துள்ளாராம். எனவே, இனிமேல் படம் டேக் ஆப் ஆவது லைக்கா நிறுவனத்தின் கையில்தான் இருக்கிறது.
இதையும் படிங்க: பைக் டூர் மட்டுமில்லை!.. நான் சைக்கிள் டூரும் போவேன்!.. க்யூட்டா சைக்கிள் ஓட்டிய அஜித் குமார்!..