More
Read more!
Categories: Cinema News latest news

அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதானா? சூர்யாவுக்கு வச்ச ஆப்பு

Actor Ajith: சமீபகாலமாக அஜித் – வெற்றிமாறன் கூட்டணி பற்றிய பேச்சுத்தான் வைரலாக போய்க் கொண்டிருக்கிறது. தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டு வருகிறார்.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு அஜித்தின் படம் யார் கூட இருக்கப் போகிறது? யார் தயாரிக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: பண உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. என்.எஸ்.கே கொடுத்தது என்ன தெரியுமா?!..

திடீரென அஜித்தை வைத்து வெற்றிமாறன் ஒரு படம் இயக்க போகிறார் என்ற செய்தி வைரலானதும் அனைவரும் ஒரே ஷாக். வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித்தா? என்று அனைவரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமில்லாமல் அப்போ வாடிவாசல் படத்தின் நிலைமை? என்ற சந்தேகமும் எழுந்தது.

வாடிவாசல் படம் இப்போதைக்கு டிராப் ஆகிவிட்டதாகவும் அஜித்தை வைத்துதான் வெற்றிமாறன் விடுதலை 2க்கு பிறகு பண்ண இருக்கிறார் என்றும் பிரபல சினிமா ஆய்வாளர் சுபேர் தெரிவித்திருக்கிறார். அமீர், ஞானவேல்ராஜா பிரச்சினை மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்ததும் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில் அமீர் கண்டிப்பாக இருப்பார் என்று சொன்னதும் சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாக சுபேர் கூறினார்.

இதையும் படிங்க: ஏதோ நடந்திருக்கு! ஹீத்தலை கூப்பிட்டா வருவா? ஷகீலா கேட்ட கேள்வியால் திக்குமுக்காடிய பப்லு

ஆனால் வாடிவாசல் படத்தில்தான் அஜித் நடிக்கிறாரா என்றால் இல்லை. வாடிவாசல் படத்தை கலைப்புலி தாணுதாணுதான் தயாரிக்க இருந்தார். சூர்யா விலகியதும் வேறொரு ஹீரோவை வைத்து அந்தப் படம் தயாராகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் பக்கம் அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தின் கதை சவுக்கு சங்கர் பற்றிய கதையாகத்தான் இருக்கப் போகிறது என்றும் அதை சவுக்கு சங்கரிடம் அனுமதி பெற்று விட்டதாகவும் இந்தப் படத்தில் கண்டிப்பாக அமீர் இருப்பார் என்றும் சுபேர் கூறினார்.

இதையும் படிங்க: ஐந்து ஸ்டாருக்காக இந்தளவுக்கு கேவலமாக பேச முடியுமா? விஷ்ணுவின் முகத்திரையை கிழித்த விஜய்

Published by
Rohini

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

9 hours ago