ஒன்னா களமிறங்கும் தல தளபதி… யாரும் சண்டை மட்டும் போட கூடாதுப்பா…

Published on: September 25, 2023
ajith and vijay
---Advertisement---

தமிழ் திரையுலக நடிகர்களுக்கிடையே போட்டி என்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரை இருப்பதுதான். ஆனால் அது அவர்கள் நிஜ வாழ்வில் இருப்பதில்லை. இவர்களுக்கிடையே இருக்கும் போட்டியானது ஆரோக்கியமான போட்டியாகவே இருந்து வருகிறது.

ரஜினி கமல், விஜய் அஜித் என முக்கிய நடிகர்களுக்கிடையே தொழில் சம்பந்தமான போட்டி நிலவுகிறது. அதைபோல் 1995ஆம் ஆண்டு ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் விஜய் மற்றும் அஜித் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர்.

இதையும் படிங்க:ஹாலிவுட்லயே கூப்பிட்டாங்க!.. கெத்து காட்டிய அட்லி.. மொக்கை பண்ணிய புளூசட்ட மாறன்..

ஆனால் அதன்பின் இருவருடைய வளர்ச்சியும் பாதிக்கபடுமோ எனும் எண்ணத்தில் இருவரும் தனிதனியே நடிக்க ஆரம்பித்தனர். பின் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இருவருமே தனக்கென தனி தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர்.

தற்போது விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் லியோ. இத்திரைப்படத்தை முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். இப்படத்திற்கு பின் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க:பாலிவுட்டே வேணாம்… யூ டர்ன் போட்ட டாப் இயக்குனர்… ஷாருக்கானுக்காக போட்ட ஸ்கெட்டில் சிக்கிய கோலிவுட் ப்ரின்ஸ்?

இப்படத்தின் படபிடிப்புகள் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் தற்போது இப்படத்தின் படபிடிப்புகள் அக்டோபர் 2ஆம் தேதி தொடக்கவிருப்பதாக தகவல்கள் வெலியகியுள்ளன.

ஆனால் அதே சமயம் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்தின் படபிடுப்பும் அதே நாளில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். அஜித் விஜய் இருவரின் படபிடிப்புகளும் ஒரே நாளில் தொடங்கவிருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:ஓவர் குஷியில் இருக்கும் ஆதிக் ரவிசந்திரன்… மார்க் ஆண்டனி ஹிட்டுக்கு பின்னால் இருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ் இதானா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.