பல கோடிகள் சம்பளம்.. பேன் இன்டியா ஸ்டார்!.. அஜித்தும் விஜயும் கூட இதுல சிக்கிட்டாங்களே!...

பாகுபலி, பாகுபலி 2, கேஜிஎப், கேஜிஎப் 2, காந்தாரா ஆகிய திரைப்படங்கள் எப்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அனைத்து மாநிலங்களிலும் வரவேற்பை பெற்றதோ அதிலிருந்து எல்லா நடிகர்களுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.
ஏனெனில், எல்லா மாநிலங்களில் பிரபலமாகலாம், படத்தின் வசூலும் அதிகரிக்கும். பேன் இண்டியா ஸ்டாராகவும் மாறிவிடலாம். குறிப்பாக சம்பளமும் டபுள் மடங்கு சேர்த்து வாங்கலாம் என்பதுதான் இதில் உள்ள கணக்கு. முன்பெல்லாம் தமிழில் ஒரு படம் ஹிட் அடித்தால் மற்ற மொழிகளில் டப் செய்து வெளியிடுவார்கள். இப்போது ஒரு படம் உருவாகும்போது அனைத்து மொழிகளிலும் எடுத்து விடுகிறார்கள்.
இதையும் படிங்க: நான் பூச்சாண்டி காட்றேன்னு நினைக்குறாங்க!.. ஒருநாள் பாருங்க!.. அப்பவே சொன்ன விஜய்…
இதனால் தனுஷும் இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். வாத்தி படம் அப்படித்தான் உருவானது. சிவகார்த்திகேயனின் படங்களும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவான வாரிசு படமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது. அந்த படத்திற்கு தனது சம்பளத்தை விட 25 கோடி சேர்த்து வாங்கினார் விஜய்.

Varisu
இப்போது அந்த ஆசை அஜித்துக்கும் வந்துவிட்டது. இதுவரை அஜித்தின் எந்த படமும் தெலுங்கு மொழியில் உருவானது இல்லை.ஆனால், விடாமுயற்சிக்கு பின் அவர் நடிக்கவுள்ள படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். பேன் இண்டியா படமாக இது உருவாகவுள்ளது.
இதையும் படிங்க: விஜய்தான் டார்கெட்டா?!. அஜித் போட்டோஸ் வெளிவரதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!. அடங்கப்பா!
அதேபோல், கோட் படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் டிவிவி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இயக்குனர் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. இதுவும் ஒரு பேன் இண்டியா படமாகவே உருவாகவுள்ளது.இந்த படத்தில் நடிக்க ரூ.300 கோடி வரை விஜய் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி எல்லோருக்கும் தனது படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி தானும் ஒரு பேன் இண்டியா ஸ்டார் ஆகவேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டதுதான் இதற்கு காரணம்.
இதையும் படிங்க: அரசியலுக்கு வந்தா 1600 கோடி வேணும்!. விஜய்க்கு பின்னால் இருப்பது யார்?!.. பரபர தகவல்..