அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?

by Akhilan |
அஜித்குமார் இதையே தான் பண்ணிட்டு இருக்காரு… கிரீடம் படத்தில் இருந்து குட் பேட் அக்லி வரை… இத கவனிச்சீங்களா?
X

Ajithkumar: கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் கிரீடம் படத்தில் இருந்து கடைசியாக உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் வரை ஒரே விஷயத்தினை கையில் எடுத்து தொடர்ச்சியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வரும் அஜித் சமீப காலங்களாகவே தன்னுடைய படங்களில் வித்தியாசத்தை கையில் எடுத்திருப்பதாக பலர் பேசி வந்தனர். ஆனால் உன்னிப்பாக கவனிக்கும் போது அவர் நடிப்பில் வெளியான கிரீடம் படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டுமே மாத்தி மாத்தி செய்து கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல… கண் கலங்கிய ராமராஜன்

ஏஎல்விஜய் இயக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தில் போலீசாக நடித்திருப்பார். அப்படத்தைத் தொடர்ந்து வெளியான பில்லா படத்தில் டானாக நடித்திருப்பார். அதற்கு அடுத்த படமான ஏகன் திரைப்படத்தில் போலீஸாக நடித்திருப்பார். அடுத்த படமான அசல் திரைப்படத்தில் மீண்டும் டானாகவே நடித்திருந்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் போலீசாக நடித்திருப்பார். அப்படத்தை தொடர்ந்து வெளியான பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் டானாக நடித்திருப்பார். அதை எடுத்து ஆரம்பம் திரைப்படத்தில் மீண்டும் போலீசாக நடித்திருப்பார். தொடர்ந்து வெளியான வீரம் திரைப்படத்தில் தம்பிகளுக்கான அண்ணனாக மட்டுமில்லாமல் சண்டை செய்யும் டானாகவும் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: இதற்காகவே தியேட்டருக்கு வேலைக்கு போனேன்!.. ராமராஜன் என்ன சொல்றார் பாருங்க!..

இதை தொடர்ந்து லைகா புரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் போலீஸாக நடிக்க இருக்கிறாராம். ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் டான்னாக நடிப்பார் என்பது பர்ஸ்ட் லுக்கிலே தெரிந்துவிட்டது. இரண்டே ரோலை மாற்றி மாற்றி செய்து வரும் அஜித் எப்போ இதை மாத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story