Connect with us
ramarajan

Cinema History

இதற்காகவே தியேட்டருக்கு வேலைக்கு போனேன்!.. ராமராஜன் என்ன சொல்றார் பாருங்க!..

ரசிகர்களிடம் மக்கள் நாயகன் என பெயர் பெற்றவர் நடிகர் ராமராஜன். உதவி இயக்குனராக 50 படங்களில் வேலை செய்துவிட்டு 5 படங்களை இயக்கிவிட்டு 1986ம் வருடம் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கியவர். அதன்பின் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, ராசாவே உன்னை நம்பி, எங்க ஊரு காவல்காரன் என பல படங்களிலும் நடித்தார்.

1988 வருடம் மட்டும் ராமராஜனின் நடிப்பில் 12 திரைப்படங்கள் வெளியானது. 1989ம் வருடம் வெளியான படம்தான் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், சந்திரசேகர், காந்திமதி என பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் வெளியான இந்த படம் வசூலில் பெரிய சாதனையையே செய்தது.

இதையும் படிங்க: நான் நடிச்சி ஆடி காரு.. ஆவணி காரு வாங்க விரும்பல… கண் கலங்கிய ராமராஜன்

சில தியேட்டர்களில் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடியது. ராமராஜனின் பல படங்கள் வெற்றி பெற்றது என்றாலும் கரகாட்டக்காரன் அதில் ஒரு மகுடமாக அமைந்தது. ரஜினி, கமலே ஆச்சர்யப்படும்படி அந்த வெற்றி இருந்தது. கமலின் அபூர்வ சகோதரர்கள் வெளியாகி 2 மாதங்களில் கரகாட்டக்காரன் வெளியானது.

நான் காலை மடக்கி கஷ்டப்பட்டு நடித்தால் ராமராஜன் தலையில் கரகத்தை வைத்து நடித்து என்னை ஓவர் டேக் செய்துவிட்டார் என கமலே சொன்னார். தற்போது 12 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமாவில் சமானியன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன். எனவே, பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: பல்லவி ஹீரோயினு சொன்னதும் ஆடிப்போன ராமராஜன்! ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘எனது அப்பா ஒரு நாடக நடிகர். நாங்கள் வசித்த ஊரில் அவர் மிகவும் பிரபலம். நானும் சின்ன வயதில் நண்பர்களுடன் இணைந்து ‘அப்போலோ நாடக சபா’ என்கிற பெயரில் நாடகம் நடத்தினேன். பிளஸ் டூ தேர்வில் ஃபெயில் ஆன பின் என்ன செய்வதென தெரியவில்லை.

அப்போது எனது நண்பர் தர்மராஜ் என்பவர் தியேட்டரில் வேலை செய்து வந்தார். டிக்கெட் கிழிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் படம் பார்ப்பேன் என அவர் சொல்ல, நாமும் தியேட்டருக்கு வேலைக்கு போனால் ஒரு நாளைக்கு 3 முறை படம் பார்க்கலாம் என ஆசைப்பட்டு தியேட்டரில் வேலைக்கு சேர்ந்தேன்’ என சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top