இந்த வருஷம் நான் ஆட்டத்துக்கே வரலை.. அஜித்தின் திடீர் முடிவால் கடுப்பான ரசிகர்கள்…
Ajithkumar: நடிகர் அஜித்குமார் தற்போது திடீர் முடிவாக தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே நடிகர் அஜித் ஒரு நேரத்தில் ஒரே படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவார். கடந்த சில வருடங்களாகவே இதை தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார். ஒரு படத்தைக் கேட்டு அதை முடிவு செய்து படத்தை ரிலீஸ் செய்யும் வரை இன்னொரு படத்தில் கமிட்டாக மாட்டார்.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
ஆனால் கடந்த வருடம் அவரின் பிற வேலைகளால் விடாமுயற்சி திரைப்படம் தொடர்ந்து தள்ளிப்போனது. தொடங்கப்பட்ட படப்பிடிப்பும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத நிலை உருவானதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க வேண்டிய நிலை உருவானது.
இதனால் பல வருடங்களுக்குப் பிறகு 20 மணி நேரம் சூட்டிங்கில் அஜித் கலந்து கொள்வதாக அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதுமாக நடந்து முடிந்திருக்கிறது.
தற்போது அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் 40 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தை இந்த வருட தீபாவளி ரிலீஸ் ஆக வெளியிட படக்குழு முடிவெடுத்து இருந்தது.
இதையும் படிங்க: இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்
இதனால் ஒரே நேரத்தில் பெரிய படத்துடன் மோத வேண்டிய நிலை உருவாகும் என்பதால் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் ஆகி டிசம்பருக்கு மாற்ற பட குழு திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லியை சம்மர் ரிலீஸ் ஆக வெளியிடலாம் எனவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.