தொழில் பக்தியே இல்ல சார் உங்களுக்கு..அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் 1993ஆம் ஆண்டு இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படம் என்பதால் இவர் தயாரிப்பாளரிடம் தனது சம்பளத்தினை பற்றி எவ்வித கோரிக்கையும் வைத்தது இல்லையாம்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் இவர் வாலி, வில்லன், தீனா போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.
இதையும் வாசிங்க: அந்த படத்த தூக்கி நம்ம படத்துல சொருவு!.. இப்படி ஆயிட்டாரே அஜித்!.. விளங்குமா விடாமுயற்சி?!…
ஆனால் ஊடகங்களில் இருந்து விலகி இருப்பது இவரின் தனித்துவம். என்னதான் மக்களுக்கு பல உதவிகளை செய்தாலும் அதனை விளம்பரப்படுத்தி கொள்ளாத மனிதர். இவர் நடித்த விஸ்வாசம் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் துணிவு. இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இவர் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான படபிடிப்புகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இப்படபிடிப்புகள் இந்த மாத இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க:அஜித்குமார் கடமைக்குன்னு நடிச்ச படம்… ஆனால் செம ஹிட்… இந்த படத்தையா அப்படி நினைச்சாரு?
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இது ஒரு புறம் இருக்க அஜித் தனது படபிடிப்பிற்கான நாளை ஒத்தி வைத்து கொண்டே போவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும். விஜய் ரஜினி போன்ற நட்சத்திரங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அஜித்குமார் இவ்வாறு இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போன்ற முன்னணி இயக்குனர்களை அஜித்குமார் பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பது இவர் திரைபடங்களில் நடிப்பதை இரண்டாம் பட்சமாகதான் பார்க்கிறாரோ என நினைக்க வைக்கிறது.இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்தில் நடிப்பதற்கு அனைத்து நடிகர்களும் தயாராக உள்ள நிலையில் அஜித்தின் இந்த மாதிரியான செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என நெட்டிசன்கள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிங்க: நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் முடிவு ஒன்னுதான்! அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்ட விஜய், அஜித்