என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க? குப்ப படம் - அஜித் படத்தால் இயக்குனரை காரித்துப்பிய ரசிகர்கள்
Actor Ajith: கோலிவுட்டில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். ஆரம்பகாலங்களில் ஏகப்பட்ட வெற்றித்தோல்விகளை பார்த்து வந்தவர். வெற்றியை விட தோல்விகளை அதிகம் பார்த்தவர் அஜித். ஒரு சில படங்களால் அஜித்தை கண்டபடி விமர்சனம் செய்தவர்கள் ஏராளம்.
இருந்தாலும் அதை எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து தன் உழைப்பை போட்டு இன்று ஒட்டுமொத்த தமிழ் நாட்டு ரசிகர்களும் தலையில் வைத்து கொண்டாடும் நடிகராக வளர்ந்து நிற்கிறார் அஜித். இப்போது அஜித் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்ஷன் என்ன தெரியுமா?…
அடுத்தடுத்து பல நல்ல இயக்குனர்களுடன் கூட்டணி வைக்க காத்துக் கொண்டிருக்கும் அஜித் விஜயின் காலி இடத்தை இவர்தான் நிரப்புவார் என்று கூறப்படுகிறது. விஜய் தளபதி 68க்கு பிறகு அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்த இருப்பதால் ஒரு தனிக்காட்டு ராஜாவாகத்தான் அஜித் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடித்த ஜீ படத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை இயக்குனர் லிங்குசாமி கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அஜித் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான படம்தான் ஜீ. 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை லிங்குசாமிதான் இயக்கினார்.
இதையும் படிங்க: பேரு மட்டும் தமிழ்நாட்டின் தளபதி!.. வைக்கிறது பூரா இங்கிலீஷ் டைட்டில்.. தளபதி 68 டைட்டில் லீக்?..
படத்தை பார்த்த ஒருவர் தியேட்டர் வாசலில் இருந்தே லிங்குசாமிக்கு போன் செய்து கண்டபடி திட்டியிருக்கிறார். ‘என்னய்யா படம் எடுத்து வச்சிருக்க? சம்பளம் மட்டும் அவ்வளவு வேண்டும் என கேட்கத் தெரியுதுல. குப்ப மாதிரி படத்தை எடுத்து வச்சிருக்க’ என கேட்டிருக்கிறார்.
அன்று முழுவதும் லிங்குசாமிக்கு தூக்கமே வரவில்லையாம். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்ன என கேட்க ஆரம்பிக்க ஒரே அழுகையாம். அழுது விட்டாராம் லிங்குசாமி. இருந்தாலும் தன் மனதில் ஒரு வெறியை ஏற்றிக் கொண்டு அதே வேகத்தில் உருவான படம்தான் ‘சண்டக்கோழி’ திரைப்படம் என்று கூறினார்.
இதையும் படிங்க: த்ரிஷா பண்ணியது அநியாயம்! 20 வருஷத்துல இதுதான் கத்துக்கிட்டாங்களா? வெளுத்து வாங்கும் பிரபலம்
ஜீ படம் வெளியான அதே வருடத்தில் தான் சண்டக்கோழி திரைப்படத்தையும் வெளியிட்டாராம் லிங்குசாமி. தன்னை திட்டியவர்கள் அதே வருடத்தில் கொண்டாடவும் ஆரம்பித்தனர் என கூறினார்.