டைட்டிலை தவிர ஒன்னும் வரல.. ஆனால் அடுத்த படத்திற்கான ஹீரோயினை தட்டி தூக்கிட்டாரே அஜித்

Published on: February 15, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: விடாமுயற்சி படமே இன்னும் முடிந்த பாடில்லை. அதற்குள் அஜித்தின் அடுத்த பட அப்டேட் வந்து இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கிறது விடாமுயற்சி திரைப்படம்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் , த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் போன்றோர் நடித்துக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அங்கு நிலவும் கால நிலை காரணமாக படப்பிடிப்பை வேறொரு இடத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தார்கள்.

இதையும் படிங்க: அஜித் காதலியை தனதாக்க ட்ரை செய்த சரத்குமார்… வெறுப்பேற்ற எப்படி இறங்கினார் தெரியுமா?

இடத்தை தேர்வு செய்யும் வரைக்கும் படப்பிடிப்பை தள்ளி வைத்தார்கள். அதனால் படக்குழு சென்னை திரும்பியது. இதற்கிடையில் சைதை துரைச்சாமியின் மகன் வெற்றித்துரைச்சாமி அஜித்துக்கு நெருங்கிய நண்பர்.

அவரின் இறப்பு அஜித்தை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. அதனால் துபாயில் இருந்த அஜித் வெற்றித் துரைச்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை திரும்பினார். இப்போது அஜித் சென்னையில்தான் இருக்கிறார்.

இதையும் படிங்க: டாப் கடை விளம்பரங்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்கிறது இவரா? அனிருத் வீட்டில் குவிந்து கிடக்கும் ரகசியம்

இதில் விடாமுயற்சி படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வராத நிலையில் ரசிகர்களும் கடுப்பாகி இருந்தார்கள். அவர்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாகும் அந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒரு சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்திற்கு ஃபிரஷான ஒரு முகம் தேவைப்படுவதால் மிருனாள் தாகூரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம். அவருடன் கங்குவா பட ஹீரோயின் திஷா பதானியை நடிக்க வைக்கும் முயற்சியிலும் இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: வளர்ப்பு அப்பாவாக மாறிய ராஜ்கிரண்.. கேட்ட ஒரே உதவியால் தூக்கி எறிந்த அஜித்… பாவமுங்க..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.