அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதானா? புதுசா இருக்கு தல இதெல்லாம்...

Ajithkumar: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் குறித்து ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த போது அவர் வழக்கமான சிகிச்சைக்கு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு மூளையில் செல்லும் நரம்பில் பிரச்னை இருப்பதாக உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது வைரலான நிலையில் ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடித்து விடும் அஜித் உடனடியாக தன்னுடைய அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்.
அப்படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்க இருக்கிறார்.இப்படத்தை தெலுங்கின் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்படத்தின் முக்கிய அப்டேட்ஸ் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஏகே63 படத்தின் டைட்டிலை பேன் இந்தியா வார்த்தை யாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எல்லா மொழிகளுக்கும் பொதுவான வார்த்தையாக இருக்கும் என்கின்றனர். மைத்திரி மூவி மேக்கர்ஸின் எக்ஸ் தளத்தில் ஏகே63 என்ற புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சித்தர் மனநிலையில் கண்ணதாசன் எழுதிய அற்புத வரிகள்!.. எம்.ஜி.ஆருக்கு ஒரு தத்துவ பாடல்!..
விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியாகி 300 நாட்களை தாண்டி இருக்கும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாமல் இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்த படத்தின் டைட்டில் ரிலீசாக இருக்கிறது. இது அஜித்தின் கேரியரில் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.