ஆலியா பட்? கியாரா.? முடிவு நம்ம தளபதி கையில் தான் போல.!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது. இந்த திரைப்படம் ஏப்ரல்-14 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது. தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தைசன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழித் திரைப்படமாக உள்ள ஒரு புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
இப்படத்தில், விஜய்க்கு இரட்டை வேடம் என கூறப்பட்டு வருகிறது. வழக்கமான ஆக்ஷன் படமாக அல்லாமல் குடும்ப சென்டிமென்ட் மையமாகக் கொண்ட ஓர் வித்தியாசமான காதல் திரைப் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தில், விஜய்யுடன் இதுவரை ஜோடி சேராத ஹீரோயினை படக்குழு தேடி வருகிறதாம். ஆம்... அந்த வகையில், அவர்கள் பாலிவுட் பக்கம் ஹீரோயின்களை தேடிவருகின்றனர். அனேகமாக பாலிவுட் முன்னணி ஹீரோயின்கள் ஆலியா பட் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இந்த பட்டியலில் முதன்மை இடத்தில் இருக்கின்றனராம்.
இதையும் படியுங்களேன்- ராஜமௌலி படத்தில் ‘இந்த’ பயங்கர வில்லனா.?! 90’s கிட்ஸ் இவர மறக்க மாட்டாங்க.!
விரைவில், இப்படத்தின் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அனேகமாக, பிப்ரவரி 14-ம் தேதி அடுத்து இப்படத்தின் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.