டர்னிங் பாயிண்டாக இருந்த படங்களை வரிசைப்படுத்திய அஜித்! அந்த ஒரு படத்தை மட்டும் விட்டுட்டாரு – ஏன் தெரியுமா?

Published on: December 23, 2023
ajith
---Advertisement---

Actor Ajith: அஜித்தின் வளர்ச்சிக்கு காரணம் அவரின் கடின உழைப்பு என்று பல பேர் கூறி வந்தாலும் அவருக்கு இருக்கும் அந்த ஒரு எண்ணம் தான் அவரை வெற்றியின் பாதையில் பயணிக்க வைக்கிறது என ஒரு இயக்குனர் கூறியிருக்கிறார்.

இதுவரை ரசிகர்களை நேரில் பொதுவெளியில் சந்திக்காத அஜித்துக்கு எப்படி இந்தளவுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர் என்று பல பேருக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. சொல்லப்போனால் அதற்கான காரணம் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.

இதையும் படிங்க: நடிப்பு அரக்கனுக்கே 12 மணிநேரம் க்ளாஸ்… இந்த படத்துக்கு இத்தனை ரிஸ்க் தேவையா… வெறியில் விக்னேஷ் சிவன்..

ஆனால் ரசிகர்களை சந்திக்காததற்கு ஒரே ஒரு காரணம் அது ரசிகர்களுக்காகத்தான் என அஜித் சொன்னதாக ஒரு அவருடன் பழகிய நெருங்கிய பிரபலங்கள் கூறியிருக்கின்றனர். தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் வெற்றியை பெற்ற நிலையில் விடாமுயற்சி படத்தையும் வெற்றியடைய வைக்க படக்குழு தயாராகி வருகின்றது. ஏகப்பட்ட வெற்றி தோல்விகளை பார்த்தவர் அஜித்.

அவருக்கு திருப்புமுனையாக பல படங்கள் இருக்கின்றன. காதல் கோட்டை திரைப்படம் தான் அஜித்தை ஒரு நடிகர் என்ற அந்தஸ்தோடு இந்த சினிமாத் துறைக்கு  காட்டியது. எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்த திரைப்படம் அது?

இதையும் படிங்க: எல்லாருக்கும் செஞ்சிட்டா அப்போ நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா.. அஜித் அதிரடியாக எடுத்த முடிவு..!

ஆனால் அஜித் அந்தப் படத்தை தன் வெற்றியாக பார்க்க வில்லையாம். காதல் கோட்டை திரைப்படத்தின் இயக்குனரான அகத்தியனிடம் ஒரு சமயம் அஜித் ‘தனக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களின் பெயர்களை வரிசைப் படுத்தினாராம். அதில் காதல் கோட்டை திரைப்படத்தின் பெயர் இல்லையாம்’.

உடனே அகத்தியன் காதல் கோட்டை திரைப்படம் வெற்றிப்படம் இல்லையா? என கேட்டாராம். அதற்கு அஜித் அது உங்கள் படம். உங்களுக்கான வெற்றி என பதில் கூறினாராம். அஜித் எப்பொழுதும் ஒரு இயக்குனரின் படமாகவேத்தான் பார்ப்பாராம். அவரின் இந்த தொலைநோக்குப் பார்வை தான் இந்த இடத்தில் வந்து கொண்டு நிறுத்தியிருக்கிறது என அகத்தியன் கூறினார்.

இதையும் படிங்க: ஜெனிக்கே தெரியாம விவகாரத்தா..? ஏனுங்க சாமி இப்படி..? அடுத்து வெடிக்க தயாராகும் எழில் வாழ்க்கை..!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.