ரோமியோ ஜூலியட் படத்தில் இருந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாருக்குமே நான் தான் டப்பிங் பேசினேன்!...

by Akhilan |
ரோமியோ ஜூலியட் படத்தில் இருந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாருக்குமே நான் தான் டப்பிங் பேசினேன்!...
X

Romeo Juliet: தமிழ் சினிமாவில் படத்தின் ஷூட்டிங் எத்தனை முக்கியமோ அது போலவே அப்படத்திற்கு கொடுக்கப்படும் டப்பிங் வாய்ஸும் முக்கியம். அப்படி இருக்க ரோமியோ ஜூலியட்டின் மொத்த படத்துக்கும் ஒரே ஆர்டிஸ்ட்டை வைத்து டப்பிங் செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்து இருக்கிறது.

கள்வனின் காதலி படத்தினை தயாரித்தவர் லட்சுமணன். அவரின் முதல் டைரக்‌ஷன் தான் ரோமியோ ஜூலியட். இப்படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நயன் தானாம்.

இதையும் படிங்க: செம நக்கல்யா உனக்கு!.. மீண்டும் விஜய்யை வான்ட்டட்டா வம்புக்கு இழுத்த மீசை ராஜேந்திரன்!..

அவரும் ஓகே சொல்லி இருக்க அந்த நேரத்தில் தான் தனி ஒருவன் படமும் ரிலீஸ் ஆகி இருந்ததாம். இதனால் அதே ஜோடி மீண்டுமா என்ற கேள்வி வந்துவிடும் என்றே ஹன்சிகா மாற்றப்பட்டாராம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். படத்தின் எல்லா பாடல்களும் பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாகவே அமைந்தது. ரோமியோ ஜூலியட் பெயருக்கு கூட இந்த படம் பெருமை சேர்க்கவில்லை என தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களே வந்தது. அத்தனை அளவு படம் மோசமான வசூலையும் குவித்தது.

இந்நிலையில் தற்போது ஒரு ஆச்சரியமான தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஹன்சிகாவை தவிர மற்ற எல்லா பெண் கதாபாத்திரங்களுக்கும் ஒரே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் வாய்ஸ் கொடுத்து இருக்கிறார். சிக்கனமா இதுதானோ என ரசிகர்களும் ஷாக்காகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகர்கள்!.. சிவ்ராஜ்குமாருக்கு இத்தனை கோடியா?!..

Next Story