Amaran: தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடியா?!.. வசூலை குவிக்கும் அமரன்!...

by சிவா |   ( Updated:2024-11-08 08:53:44  )
amaran
X

#image_title

Amaran: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்க சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது.

சென்னையை சேர்ந்த முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் பணிபுரிந்த செய்த வீரதீர செயல்கள், அவரின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை, மனைவி மற்றும் மகளிடம் காட்டிய அன்பு, நாட்டின் மீது அவருக்கு இருந்த பற்று, தீவிரவாதிகளுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் என அவரின் வாழ்வில் முக்கிய விஷயங்கள் அமரன் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: Amaran: அமரன் படத்துக்கு எதிராக வெடித்த போராட்டம்… திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு..

இந்த படத்தில் முகுந்த்தாகவே சிவகார்த்திகேயன் வாழ்ந்திருக்கிறார் என பலரும் பாராட்டுகின்றனர். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் கூட படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்து பாராட்டியதோடு, படத்தை பாராட்டி ஒரு வீடியோவும் வெளியிட்டார்.

படம் பார்க்கும் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். தீபாவளிக்கு வெளியான படங்களில் அமரன் படத்திற்கு மட்டுமே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தை தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஆன்லைன் முன்பதிவு அதிகமாகவே இருந்தது. இப்போது நல்ல வசூலை அங்கும் அமரன் படம் பெற்று வருகிறது.

Amaran

Amaran

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பை மட்டுமில்லாமல் சாய் பல்லவி நடிப்பையும் எல்லோரும் பாராட்டி வருகின்றனர். படத்தின் கடைசி 20 நிமிட காட்சியில் சாய் பல்லவியின் நடிப்பு பலரையும் கலங்க வைக்கும்படி அமைந்திருக்கிறது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 200 கோடி வரை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதில், தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 82 கோடியை இப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் அமரன் படமே அதிக வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Vijay: விஜய் எல்லாரையும் கேரவனுக்குள்ள விடுவாரா?!… இன்னும் 500 நாள் இருக்கு… பிரபல நடிகர் தடாலடி!…

Next Story