அமரன் படத்தின் ராஜ்கமல் எடுத்திருக்கும் திடீர் முடிவு…விஜய் அஜித்துக்கு போட்டியா இதுவேறயா?…
Amaran: சிவகார்த்திகேயன் நடிப்பில் பரபரப்பாக உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் அடுத்த கட்ட நகர்வு குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய்பல்லவி ஜோடியாக இணைந்து நடிக்கிறார். இப்படம் இந்திய ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்று படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோபியை அழுகவிடும் ராதிகா மற்றும் ஈஸ்வரி… திடீரென தடம் மாறும் ஜெனி… என்ன அடுத்த பிரச்னையா?
இப்படத்தின் டைட்டில் புரோமோ ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் 20 கோடியை தனது சம்பளமாக பெற்று இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இன்னும் மீதி 3 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் படத்தின் சில காட்சிகளை பார்த்துவிட்டு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக படக்குழு இடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.
இதையும் படிங்க: மரண தருவாயில் கமலிடம் நாகேஷ் சொன்ன வார்த்தைகள்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா!..