விஜய், ரஜினி எல்லாம் ஓரமா போங்க!... அமரன் படத்தின் புதிய சாதனை?!... நம்பர் 1-ல் எஸ்கே!...

by ramya suresh |   ( Updated:2024-11-23 07:35:29  )
sivakarthikeyan
X

sivakarthikeyan

அமரன் திரைப்படம் மீண்டும் ரஜினி, விஜயின் ரெக்கார்டை பிரேக் செய்து ஒரு புதிய சாதனையை படைத்திருக்கின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: Lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. மேலும் கமலஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியானது முதலே தொடர்ந்து மக்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றிருக்கின்றது.

இந்த திரைப்படத்தின் வெற்றியின் மூலமாக நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டார். நிச்சயம் சிவகார்த்திகேயன் கெரியரில் அமரன் ஒரு முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் 25 நாட்களை கடந்த போதிலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

amaran

amaran

இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது அமரன் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கின்றது. அதாவது புக் மை ஷோவில் இத்திரைப்படத்தின் டிக்கெடுகள் அனைத்தும் வேகமாக விற்று தீர்ந்திருக்கின்றது. இதுவரை 4.55 மில்லியன் அமரன் டிக்கெட்டுகள் விற்பனையாக இருக்கின்றன.

இது விஜயின் கோட் படத்திற்கான டிக்கெட்டை விட அதிகம். விஜயின் கோட் திரைப்படம் 4.5 மில்லியன் டிக்கெட்டுகளையும், ரஜினியின் வேட்டையன் திரைப்படம் 2.7 மில்லியன் டிக்கெட்டுகளும் விற்பனையாகி இருக்கிறது. இவை அனைத்தையும் முறியடித்து அமரன் திரைப்படம் புக் மை ஷோவில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்த ஆண்டு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட படமாக அமரன் திரைப்படம் மாறி இருக்கின்றது.

இதையும் படிங்க: Vikram: பிரம்மாண்டத்த நம்புனா பரலோகம்தான்! அடுத்த பட இயக்குனரை லாக் செய்த விக்ரம்.. விவரம்தான்

அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றார். அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து டான் திரைப்பட இயக்குனருடன் புதிய திரைப்படத்தில் இணைந்து இருக்கின்றார். அப்படத்தை தொடர்ந்து சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story