BB Tamil 9: விஜய்சேதுபதி பண்ணது ரொம்ப தப்பு! வெளியே வந்ததும் குமுறிய பிக்பாஸ் பிரபலம்

Published on: January 7, 2026
sethu (1)
---Advertisement---

தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. 9வது சீசனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் முடியும் தருவாயில் சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் 6 போட்டியாளர்களே உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற வகையில் கடும் போட்டியே நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் செலிபிரிட்டி ரவுண்டாக ஏற்கனவே வெளியே போன போட்டியாளர்கள் உள்ளே வர வழைக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பார்வதியும் கம்ருதீனும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதை பற்றி வெளியே விவாதங்களும் நடந்து வருகின்றனர். ஆனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டத்தை பலரும் வரவேற்றிருக்கின்றனர். கடந்த வாரம் தான் மாஸ் காட்டிவிட்டார் விஜய்சேதுபதி என ரசிகர்கள் குதூகலித்தனர்.

Also Read

இந்த நிலையில் போட்டியாளர் அமித் வெளியே போனது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வெளியே வந்ததும் பிக்பாஸ் குறித்து தன்னுடைய அனுபவங்களை பேட்டியில் கூறி வருகின்றனர். அப்போது விஜய்சேதுபதி செய்தது ரொம்ப தப்பா இருந்தது என அமித் கூறியிருக்கிறார். அதாவது அமித் கேப்டனாக இருந்த சமயம் நல்ல கேப்டன்சிதான் என போட்டியாளர்கள் அனைவரும் கூறினார்கள்.

விக்ரம் பேசும் போது கூட அடுத்த வாரம் கேப்டன்சிக்கு போட்டி இல்லைன்னா நீதான் அடுத்த வாரமும் கேப்டன் என்று விக்ரம் சொன்னதாக அமித் கூறினார். இப்படி இருக்கும் போது அந்த வாரத்தில் எனக்கு எதிராக மற்ற போட்டியாளர்களை சாட்சியாக நிக்க வைத்தார் விஜய்சேதுபதி. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் விஜய்சேதுபதி செய்தது எனக்கு மிகவும் தப்பா இருந்தது என அமித் கூறினார்.

சில சமயங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது பிக்பாஸில் நடக்காது. குறிப்பாக இதை கண்டிப்பாக விஜய்சேதுபதி தட்டி கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எதுவுமே அவர் கேட்கமாட்டார். இதுதான் சில சமயங்களில் ரசிகர்கள் விஜய்சேதுபதி மீது கடுப்படைய காரணம்.