என்னோட ரீஎன்ரி விஜய்க்கு சேலன்ஞ்சா இருக்கும்!.. ‘காதலுக்கு மரியாதை’ படவாய்ப்பை தவறவிட்ட ஆதங்கத்தில் பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் வளர்ச்சி அடைந்த நடிகராக நடிகர் விஜய் திகழ்கிறார். இவருடைய இந்த வளர்ச்சியை சமீபத்தில் நடந்த வாரிசு பட ஆடியோ லான்ஞ்சிலேயே நாம் பார்த்திருப்போம். எத்தனை ரசிகர்கள், எப்படிப்பட்ட கூட்டம்? அனைவரும் அசந்து போகிற அளவில் அந்த விழாவினை நடத்தி முடித்தார்கள். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்கும் விஜயின் வளர்ச்சி ஒரு அசுர வளர்ச்சி என்றே கூறலாம். அதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமாகும். மேலும் அவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் நல்ல […]
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் வளர்ச்சி அடைந்த நடிகராக நடிகர் விஜய் திகழ்கிறார். இவருடைய இந்த வளர்ச்சியை சமீபத்தில் நடந்த வாரிசு பட ஆடியோ லான்ஞ்சிலேயே நாம் பார்த்திருப்போம். எத்தனை ரசிகர்கள், எப்படிப்பட்ட கூட்டம்?
அனைவரும் அசந்து போகிற அளவில் அந்த விழாவினை நடத்தி முடித்தார்கள். இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்கும் விஜயின் வளர்ச்சி ஒரு அசுர வளர்ச்சி என்றே கூறலாம். அதற்கு காரணம் அவருடைய தன்னம்பிக்கையும் விடா முயற்சியுமாகும். மேலும் அவர் தேர்ந்தெடுக்கும் நடிக்கும் நல்ல நல்ல கதைகளும் ஆகும்.
அப்படி பட்ட கதையம்சம் கொண்ட படம் தான் விஜயின் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாக இருந்தது. ஆரம்பத்தில் கிடைக்கிற வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு பூவே உனக்காக எப்படி ஒரு வெற்றியை பெற்று தந்ததோ அதே மாதிரியான வெற்றியை பெற்று தந்த படம் ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம்.
இதையும் படிங்க : அசாத்திய வித்தையை காட்டி பா.ரஞ்சித்தை அசரவைத்த மாளவிகா மோகனன்… இவர் கிட்ட இப்படி ஒரு டேலண்ட்டா??
இந்த படம் விஜயின் கெரியரில் ஏன் ரசிகர்களாலும் மறக்க முடியாத படமாகும். மானசீக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விஜயின் நடிப்பு குறிப்பாக பெண்களை கவர்ந்தார் விஜய். இந்த படத்திற்கு பிறகு தான் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் விஜயை தேடி வந்தது.
இப்படி இருக்க காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிகர் அப்பாஸை தான் அணுகியிருக்கிறார்கள் படக்குழு. ஆனால் அப்பாஸின் மேனேஜர் அந்த வாய்ப்பை ஏதோ ஒரு காரணத்தால் தவிர்த்துவிட்டாராம். இது அப்பாஸுக்கே தெரியாதாம். அதன் பிறகு விஜய் கமிட் ஆகியிருக்கிறார்.
இதையும் படிங்க : எங்க பாவம் சும்மா விடாது!.. இளம் தயாரிப்பாளரை வேதனைக்குள்ளாக்கிய சரண்யா பொன்வன்னன்!..
பிறகு அப்பாஸுக்கு தெரியவர மீண்டும் அவரே போய் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க விஜய் கமிட் ஆகிவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லாத்துக்கும் காரணம் மேனேஜர் தான். இதே போல் ஜீன்ஸ் பட வாய்ப்பும் அப்பாஸுக்கு தான் வந்திருக்கிறது. அந்த வாய்ப்பும் பறிபோனதுக்கு காரணம் அவரின் மேனேஜர் தான் என்று சொல்லி அப்பாஸ் மிகவும் வருத்தப்பட்டு கூறினார்.
மேலும் விஜயின் அந்த படத்தில் நடித்திருந்தால் விஜய் இப்பொழுது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறாரோ அதே வளர்ச்சியை அப்பாஸும் எட்டியிருப்பார் என்று சில தரப்பினர் கூறுகின்றனர். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு அப்பாஸ் ‘இப்ப மட்டும் ஒன்னுமில்லை, அப்பாஸ் மட்டும் ரீஎன்ரி கொடுத்தால் அந்த வளர்ச்சி எல்லாம் தூக்கிருவேன், எல்லாம் விதிப்படி நடக்கும் ’ என்று கூறினார்.