எத்தன கோடி கொடுத்தாலும் வேண்டாம்!... ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சியான் விக்ரம்...
திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திரையுலகில் படாத பாடுபட்டு மேலே வந்தவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், காசி, ஐ என நடிப்பில் வெரைட்டி காட்டியவர். பொன்னியின் செல்வனிலும் ஆதித்த கரிகாலனாக அசத்தலான நடிப்பை கொடுத்தவர். சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத காலங்களில் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி போன்ற ஹீரோக்களுக்கு தம்பியாக கூட நடித்துள்ளார். மேலும், அப்பாஸ், பிரபு தேவா போன்ற ஹீரோக்களுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார். சேது இவரின் திரை வாழ்க்கையை […]
திறமை இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திரையுலகில் படாத பாடுபட்டு மேலே வந்தவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், அந்நியன், காசி, ஐ என நடிப்பில் வெரைட்டி காட்டியவர். பொன்னியின் செல்வனிலும் ஆதித்த கரிகாலனாக அசத்தலான நடிப்பை கொடுத்தவர். சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காத காலங்களில் மலையாளத்தில் மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி போன்ற ஹீரோக்களுக்கு தம்பியாக கூட நடித்துள்ளார். மேலும், அப்பாஸ், பிரபு தேவா போன்ற ஹீரோக்களுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார்.
சேது இவரின் திரை வாழ்க்கையை மாற்றியது. இவருக்கென ரசிகர்களையும் உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்துவிட்டார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருபக்கம் அர்ஜூன் போன்ற ஹீரோக்கள் வில்லனாக நடிக்க துவங்கிவிட்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் வில்லன்களில் ஒருவராக அர்ஜூன் நடித்து வருகிறார்.
அதேபோல், ஜெய்பீம் பட இயகுனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக நடிக்க சியான் விக்ரமை இயக்குனர் அணுகியுள்ளார். அவரை நேரில் வரவழைத்து கதையெல்லாம் கேட்ட விக்ரம் இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என நாகரீகமாக சொல்லி மறுத்துவிட்டாராம். பல கோடி சம்பளமாக தருவதாக கூறியும் அவர் பிடி கொடுக்கவில்லையாம். நடித்தால் ஹீரோ மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
இதையடுத்து, நடிகர் அர்ஜூனை படக்குழு அணுகியுள்ளது. அவரும் அதற்கு ஓகே சொல்லும் மனநிலைக்கு வந்துவிட்டாராம். எனவே, ரஜினி படத்தில் அர்ஜுனை வில்லனாக ரசிகர்கள் விரைவில் பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.