கூட நடிச்ச ஆளு சார் நான்!. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க போய் அவமானப்பட்ட நடிகர்..

by Rohini |   ( Updated:2024-02-10 14:20:58  )
vijay
X

vijay

Actor Vijay: தமிழ் சினிமாவில் பெரும் புகழைப் பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடிக்க கூட பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.

கோட் படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் விஜயுடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகர் விஜயை பார்க்க ஆசைப்பட்டு அவமானப்பட்ட சம்பவத்தை ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகைகளை காதல் வலையில் வீழ்த்திய கமல்ஹாசன்… லிஸ்ட் என்னங்க இவ்வளோ பெருசா போகுதே?

விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தில் ஒரு இரண்டாவது நாயகனாக நடித்திருப்பவர் நடிகர் கிருஷ்ணா. மலையாள நடிகரான இவர் தமிழில் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். பெரும்பாலும் ஹீரோவுக்கு போட்டியாக ஹீரோயினுக்கு ஜோடியாகும் மாதிரியான காட்சிகளில்தான் கிருஷ்ணா நடித்திருப்பார்.

ஷாஜகான் படத்தை போலவே ஷாலினி பிரசாந்த் நடித்த பிரியாத வரம் வேண்டும் படத்திலும் ஷாலினியுடன் நெருக்கம் காட்டும் காட்சிகளில் நடித்து ஹீரோயினை வெறுப்பேத்தும் ஒரு கேரக்டரில்தான் கிருஷ்ணா நடித்திருப்பார்.

இதையும் படிங்க: தன் மகளை அந்த நடிகை போல ஆக்கனும்னு ஆசைப்பட்ட வனிதா! கடைசில என்னாச்சு தெரியுமா?

ஒரு சமயம் விஜயின் மேனேஜருக்கு பல முறை போன் செய்து விஜயை பார்க்க வேண்டும் என சொன்னாராம். ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். சில சமயங்களில் வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பினாராம். அதற்கும் ஒரு பலன் இல்லையாம்.

பின் நேராக அவர் மேனேஜரையே பார்த்து ‘நான் ஒரு நடிகர். பெயர் கிருஷ்ணா. விஜயுடன் சேர்ந்து ஷாஜகான் படத்தில் நடித்திருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் மட்டும் விஜயை பார்த்து விட்டு போய்விடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: பிரபல நடிகரால் சினிமா வாழ்க்கையை மொத்தமாக இழந்த நக்மா…நடிகர் என்ன ஆனார் தெரியுமா?

krish

krish

ஆனால் அதற்கு விஜயின் மேனேஜர் ஷாஜகான் படத்தில் இருக்கும் விஜய் இப்போது இல்லை. அவருடைய ரேஞ்சே வேற. அதனால் பார்க்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். இதை குறித்து பேசிய கிருஷ்ணா ‘ நான் என்ன காசு பணமா கேட்கப் போகிறேன்? கூட நடிச்ச ஆளு நான். பார்த்து பல வருடம் ஆகிவிட்டது. ஒரு போட்டோ எடுக்கலானுதான் நினைச்சு போனேன். அதுக்கு இப்படியா’ என மிகவும் மனம் வருந்தி பேசினார்.

Next Story