அண்ணன் பாலாவுடன் மீண்டும் நான்.. மாஸ் அப்டேட் கொடுத்த சூர்யா...
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். ஏனென்றால் பாலா படங்கள் தான் சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அந்த வகையில் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலா சூர்யாவின் நடிப்பை திறமையாக வெளிக்காட்டி இருப்பார். ஆனால் இயக்குனர் பாலாவுக்கு கெட்ட நேரம் என்னவெனில், இறுதியாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் தோல்வி […]
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். ஏனென்றால் பாலா படங்கள் தான் சூர்யாவுக்கு திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது. அந்த வகையில் நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பாலா சூர்யாவின் நடிப்பை திறமையாக வெளிக்காட்டி இருப்பார்.
ஆனால் இயக்குனர் பாலாவுக்கு கெட்ட நேரம் என்னவெனில், இறுதியாக நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த காரணத்தால் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகல் வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது இதை சூர்யா உறுதி செய்துள்ளார்.
தனது டிவிட்டர் பக்கத்தில் பாலா மற்றும் தனது தந்தை சிவக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்… ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்.. 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்… அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்…’ என பதிவிட்டுள்ளார்.
சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டதால் பாலாவுடன் அவர் இணைவது உறுதியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கான வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இயக்குனர் விஜி வசனம் எழுத உள்ளாராம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. எனவே, பாலா படத்தை முடித்த பின்னர் அவர் வெற்றிமாறன் படத்தில் நடிப்பரா என்பது தெரியவில்லை.