யார் யாரையோ கொண்டாடும் போது இவர விடலாமா? சேலஞ்சான கேரக்டரை ஏற்று நடித்த அஞ்சலியின் டாப் 5 படங்கள்

Anjali : சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு நடிகை அல்லது நடிகரின் மார்கெட்டை பொறுத்தே அந்த நடிகர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எத்தனையோ சின்ன சின்ன நடிகர்கள் திறமை இருந்தும் அவர்களால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை. அந்த வகையில் மற்ற ஹீரோயின்களை விட நடிகை அஞ்சலி அசாத்திய திறமை வாய்க்கப்பெற்றவர். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அஞ்சலியின் கதாபாத்திரம் நின்று பேசும். அப்படி பேசப்பட்ட படங்களைத்தான் பார்க்க இருக்கிறோம். கற்றது தமிழ்: ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் […]

By :  Rohini
Update: 2023-10-03 05:06 GMT

anjali

Anjali : சினிமாவை பொறுத்தவரைக்கும் நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு நடிகை அல்லது நடிகரின் மார்கெட்டை பொறுத்தே அந்த நடிகர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எத்தனையோ சின்ன சின்ன நடிகர்கள் திறமை இருந்தும் அவர்களால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை. அந்த வகையில் மற்ற ஹீரோயின்களை விட நடிகை அஞ்சலி அசாத்திய திறமை வாய்க்கப்பெற்றவர். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் அஞ்சலியின் கதாபாத்திரம் நின்று பேசும். அப்படி பேசப்பட்ட படங்களைத்தான் பார்க்க இருக்கிறோம்.

கற்றது தமிழ்: ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்தார் என்று சொல்லமுடியாது. ஆனந்தியாகவே வாழ்ந்திருப்பார். அதுவும் அம்மா இல்லாத இந்த நேரத்தில் என்னால சமைக்க முடிந்தது இந்த ஒரு டம்ளர் சுடுதண்ணீர்தான் என்று ஒரு சுடுதண்ணீர் மூலமாக தன் காதலை வெளிப்படுத்தும் விதம் அஞ்சலியின் நடிப்பை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.முதல் படத்திலேயே இப்படியும் நடிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை அஞ்சலில் ஏற்படுத்தியிருப்பார்.

இதையும் படிங்க: குஸ்கா மோடில் இருக்குறாரு…! இவருகெல்லாம் வாய் மட்டும் தான்… கோலிவுட் ஹீரோஸை கழுவி ஊற்றும் ப்ளூசட்டை மாறன்..!

அங்காடித்தெரு: சென்னை தி. நகரில் வேலைக்கு என்று வரும் வெளி ஊர் பெண்கள் , இளைஞர்கள் படும் அவஸ்தையை மிக தைரியமாக வெளிப்படுத்திய படம்தான் அங்காடித்தெரு. இந்தப் படத்தில் தன்னுடைய மேலாளரால் படும் வேதனையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் அஞ்சலி அனைவர் மனதிலும் நிலைத்து நின்றார். கற்றது தமிழ் மற்றும் அங்காடித்தெரு ஆகிய இரண்டு படங்களுக்கும் சேர்த்து சிறந்த நடிகை என்ற பிலிம் பேர் விருதை தட்டிச் சென்றார் அஞ்சலி.

எங்கேயும் எப்போதும்: மேலே பார்த்த இரண்டு படங்களின் கதாபாத்திரத்திற்கு நேர் எதிரே இந்தப் படத்தில் நடித்திருப்பார். வால் தனம் செய்யும் குறும்புக் கார பெண்ணாக தன் காதலுடன் செய்யும் லூட்டிகளால் அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார் அஞ்சலி. தன் கண்ணெதிரே காதலன் ஒரு விபத்தில் இறந்த பிறகும் அதை வெளிக்காட்டாமல் தன் மனதுக்குள் பூட்டி புழுங்கும் அஞ்சலியின் அந்த நடிப்பு எல்லோரையும் அழ வைக்கும்.

இதையும் படிங்க: வெற்றி மிதப்பில் மிதந்த நடிகருக்கு ஆப்பு வைத்த முருகதாஸ்… நிலைமை எப்போ வேணாலும் மாறலாம் சாரே…

கலகலப்பு: பக்கா காமெடி திரைப்படமான கலகலப்பில் விமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார் அஞ்சலி. தனக்கு நல்லாவே நகைச்சுவை வரும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருப்பார். நகைச்சுவை மட்டுமில்லாமல் செண்டிமெண்ட், ஐட்டம் பாடல், காமெடி என எல்லாவற்றிற்கும் தீனி போடும் படமாக அமைந்ததுதான் கலகலப்பு. எதார்த்தமான நடிப்பால் பார்த்த அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார் அஞ்சலி.

இறைவி: ஆண்களின் பதற்றம், டென்ஷன் , கோபம் என இவர்களால் பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை சொன்னப் படம்தான் இறைவி. தன் கல்யாண வாழ்க்கையை பற்றி சினிமா உலகில் சிந்திக்கும் கதாபாத்திரம் தான் அஞ்சலியின் கேரக்டர். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர் கண்ட கனவுகள் எல்லாமே சுக்கு நூறாக உடைந்து விடும். இதை அப்படியே கண்முன் நிறுத்தியிருப்பார் அஞ்சலி. இப்படி இன்னும் ஏகப்பட்ட படங்களில் அஞ்சலியின் கதாபாத்திரம் வித்தியாசமானதாகவே அமைந்திருக்கும். இப்படிப்பட்ட நடிகையை நாம் கொண்டாட மறந்து விடுகிறோம்.

இதையும் படிங்க: கமலுக்கு கிடைத்த வாய்ப்பு சிவாஜிக்கு இல்லையே… அதனால் தான் இந்த படத்துக்கு இத்தனை லேட்டா?

Tags:    

Similar News