ஒரு நாளைக்கு 4 லட்சம் வாங்குவேன்!.. எல்லாம் போச்சி.. புலம்பும் ஷகிலா...

90களில் மலையாளத்தில் அடல்ட் ஒன்லி படங்கள் நிறைய தயாரிக்கப்பட்டது. அதை பார்ப்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் இருந்தது. அந்த படங்கள் தமிழ்நாட்டிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அந்த படங்களுக்கு நடுவே பிட்டை வேறு சொருகியிருப்பார்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது. அப்படி பல அடல்ட் ஒன்லி திரைப்படங்களில் நடித்தவர்தான் ஷகிலா. இவரின் படங்களுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்தது. கேரளாவிலும் கூட்டம் அலைமோதியது. ஒருகட்டத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்து வெளியாகும் படங்களை விட ஷகிலா படங்கள் […]

Update: 2023-06-03 06:37 GMT

90களில் மலையாளத்தில் அடல்ட் ஒன்லி படங்கள் நிறைய தயாரிக்கப்பட்டது. அதை பார்ப்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் இருந்தது. அந்த படங்கள் தமிழ்நாட்டிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அந்த படங்களுக்கு நடுவே பிட்டை வேறு சொருகியிருப்பார்கள் என்பதால் கூட்டம் அலைமோதியது. அப்படி பல அடல்ட் ஒன்லி திரைப்படங்களில் நடித்தவர்தான் ஷகிலா. இவரின் படங்களுக்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்தது. கேரளாவிலும் கூட்டம் அலைமோதியது.

ஒருகட்டத்தில் மம்முட்டி மற்றும் மோகன்லால் நடித்து வெளியாகும் படங்களை விட ஷகிலா படங்கள் அதிக வசூலை பெற்றது. இதில் கடுப்பான மம்முட்டி கேரள தயாரிப்பாளர் சங்கத்துடன் கை கோர்த்து ஷாகிலா படங்கள் இனிமேல் இங்கே வெளியாகக்கூடது. அதோடு, அவர் கேரளாவிலேயே இருக்க கூடாது என போர்க்கொடி தூக்க ஷகிலாவும் கேரளாவிலிருந்து வெளியேறி சென்னை வந்து செட்டில் ஆனார்.

தமிழில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்தார். ஆனால், விஜய்டிவி மூலம் அவரின் இமேஜ் மாறியுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அவரை எல்லோரும் அம்மா என அழைக்க துவங்கிவிட்டனர். அதோடு, ஒரு திருநங்கையையும் அவர் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும், யுடியூப் சேனல்களில் சர்ச்சையில் சிக்குபவர்களை பேட்டியும் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஷகிலா ‘கேரளாவில் நான் இருந்தபோது ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதிப்பேன். படப்பிடிப்பில் பிஸியாக இருப்பேன். அப்படி நான் சேர்த்த பணத்தையெல்லாம் என் அக்கா எடுத்து சென்றுவிட்டார். அவர் என்னை ஏமாற்றிவிட்டார்’ என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

Tags:    

Similar News