சந்திரமுகி 2-வை அடுத்து லால்சலாம்!.. கடும் அப்செட்டில் ஐஸ்வர்யா.. என்ன நடந்துச்சி தெரியுமா?...

Laal Salaam: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் லால்சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தற்போது ஒரு மிகப்பெரிய பிரச்னை வந்துள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் சவுத் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையும் வாசிங்க:கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய […]

By :  Akhilan
Update: 2023-11-04 03:48 GMT

Laal Salaam: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் லால்சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தற்போது ஒரு மிகப்பெரிய பிரச்னை வந்துள்ளது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் சவுத் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இதையும் வாசிங்க:கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..

முக்கியமாக ரஜினிகாந்த் முஸ்லீமாகவும், விஷ்ணுவின் தாய் மாமனாகவும் நடித்து இருக்கிறார். முதலில் இவருக்கு 5 முதல் 10 நிமிட காட்சிகளே வைக்கப்பட்டு இருந்ததாம். ஆனால் ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாதி முழுவதும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் எக்கசக்கமாக படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில் அடுத்த மாதம் 8ந் தேதி படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பெரிய பிரச்னை ஒன்று படக்குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறதாம். அதாவது மும்பையில் 23 நாட்கள் ஷூட் செய்த காட்சிகளை காணவில்லையாம்.

இதையும் வாசிங்க:திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு சிவாஜி செய்த உதவி!.. மறைக்கப்பட்ட சிவாஜியின் மறுபக்கம்…

இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சொன்ன போது செம கடுப்பாகி தன்னுடைய அசோசியேட்களை ரெய்டு விட்டு இருக்கிறார். அதுவும் அந்த காட்சிகளில் ரஜினியெல்லாம் நடித்து இருந்ததால் அமெரிக்க கலைஞர்களை அழைத்து வந்து டிஸ்கில் இருந்து மீட்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறதாம்.

அது கிடைத்துவிட்டால் லால்சலாம் தப்பிக்கும் இல்லை ரஜினி இருக்கும் பிஸி ஷெட்யூலில் மீண்டும் வந்து நடித்து கொடுப்பாரா? என்ன செய்ய போகிறார் ஐஸ்வர்யா என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

இதற்கு முன்பு சந்திரமுகி 2 படம் உருவானபோதும் இப்படித்தான் எடுக்கப்பட்ட சில காட்சிகள் காணாமல் போனது. இதனால், பட ரிலீஸே தள்ளிப்போனது. இப்போது லால்சலாம் படமும் இதே பிரச்சனை சந்தித்திருக்கிறது.

Tags:    

Similar News