நடிகைகள் விஷயத்தில் மம்மூட்டியை ஃபாலோ செய்யும் தல! அதனால் அவருக்கு கிடைச்ச பேரு என்ன தெரியுமா?
Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு கண்ணியமான நடிகராக பார்க்கப்படுகிறார். அவருடன் நடித்த எந்த நடிகைகளை கேட்டாலும் அஜித்தை பற்றி சொல்லுவது ‘அவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன்’ என்றுதான். பெரும்பாலும் வதந்திகளில் சிக்காத ஒரு நேர்மையான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித். இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறும் போது அஜித்தை பற்றி நடிகைகள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அந்தளவுக்கு நடிகைகளிடம் அஜித் பழகும் முறைதான் காரணம் என்று கூறினார். […]
Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு கண்ணியமான நடிகராக பார்க்கப்படுகிறார். அவருடன் நடித்த எந்த நடிகைகளை கேட்டாலும் அஜித்தை பற்றி சொல்லுவது ‘அவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன்’ என்றுதான். பெரும்பாலும் வதந்திகளில் சிக்காத ஒரு நேர்மையான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித்.
இதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறும் போது அஜித்தை பற்றி நடிகைகள் அப்படி சொல்கிறார்கள் என்றால் அந்தளவுக்கு நடிகைகளிடம் அஜித் பழகும் முறைதான் காரணம் என்று கூறினார்.
இதையும் படிங்க: முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.
இந்த வகையில் நடிகர் மம்மூட்டியும் படப்பிடிப்பில் நடிகைகளிடம் மிக கண்ணியமாக நடப்பாராம். அதாவது படத்தில் ஏதாவது ஒரு டூயட் பாடல் இருந்தால் அது சம்பந்தமான காட்சிகளில் நடித்து விட்டு அதன் பின் அந்த நடிகையின் பக்கமே திரும்ப மாட்டாராம்.
இதே போல் தான் நடிகர் அஜித்தும். தமிழ் சினிமாவில் ஒரு கண்ணியமான நடிகராக அஜித்தை அனைவரும் சொல்வார்கள் என்று சித்ரா லட்சுமணன் கூறினார். இப்படி அஜித்துக்கு என்று சினிமாவில் ஒரு நல்ல பெயர் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு குனிஞ்சி காட்டுறியே!.. வீக் எண்ட் விருந்து வைத்த ஸ்ரேயா…
அதனால்தான் நடிகைகளுக்கு மிகவும் பிடித்தமான நடிகராகவே அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்கான வேலைகளில் மும்முரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
அந்தப் படத்தில் ஐந்தாவது முறையாக த்ரிஷா அஜித்துடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவும் இதே போல் அஜித்தை ஒரு ஜெண்டில்மேன் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: முத இத முடிக்கணும்! லியோ ஆடியோ லாஞ்சில் பக்கா ப்ளான் போட்ட விஜய்… நல்ல ஐடியா தான்!.
த்ரிஷாவும் அஜித்தும் சேர்ந்து ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்து ஏறகனவே ஹிட் கொடுத்தவர்கள். இப்போது மீண்டும் விடாமுயற்சியில் இணைந்திருக்கிறார்கள்.