ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்!.. அஜித் ரூட்டில் ஆட்டோ ஓட்டும் ஏ.ஆர். முருகதாஸ்!.. பாவம் அவர்!..
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். பொதுவாகவே ஹீரோயின்கள், காமெடி நடிகர்கள் மற்றும் வில்லன்கள் தான் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பார்கள். ஹீரோக்கள் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் இணைவார்கள். சில ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் ஒரே லுக்கில் எந்த வித்தியாசமும் தெரியாமல் நடிப்பார்கள்.
ஆனால், இயக்குநர்கள் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்வார்கள். இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் வித்தியாசமாக தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தையும் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தையும் ஒரே நேரத்தில் டோ செய்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: விமல் கூட இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா?.. விலங்கு வெப்சீரிஸுக்குப் பிறகு இதாவது விளங்குமா?..
ஏற்கனவே சல்மான் கானுக்கு தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆகி வரும் நிலையில், ஷாருக்கானுக்கு அட்லீ கிடைத்ததை போல நமக்கு ஏ.ஆர். முருகதாஸ் பக்கவான படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானுக்குள் முடித்து கொடுத்து விடுவார் என நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தையும் சல்மான் கான் படத்தையும் ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைத்தது போல மும்பைக்கும் சென்னைக்கும் பறந்து பறந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இதில், எந்த படம் சொதப்பும், எந்த படம் ஹிட் அடிக்கும், இரண்டு படமே கைகொடுக்குமா? என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த படத்தோட சீனை அந்த படத்திலும் அந்த படத்தின் சீனை இந்த படத்திலும் மாற்றி எடுக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் படத்தில் துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமாலையும் இணைத்துக் கொண்டார் ஏ.ஆர். முருகதாஸ்.
இதையும் படிங்க: திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..
இந்தியில் அமீர்கானை வைத்து கஜினி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் அதன் பின்னர் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இயக்கிய அகிரா திரைப்படம் ஓடவில்லை. துப்பாக்கி படத்தை ஹாலிடே என ரீமேக் செய்து அக்ஷய் குமாரை வைத்தும் இயக்கி ஃபிளாப் கொடுத்தார்.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸுக்கு இரண்டு படங்களும் கம்பேக் படங்களாக அமைந்தால் அவரது ரேஞ்சே எங்கேயோ போய் விடும் என்கின்றனர். ஆனால், கொஞ்சம் சறுக்கினாலும் அவ்வளவுதான் என்கிற எச்சரிக்கை கத்தியும் கழுத்துக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: விஜய் பட வில்லனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எஸ்.கே!.. செம டெரரா இருக்காரே!.. வீடியோ பாருங்க!…