இனிமே உனக்கு கதை எழுத மாட்டேன்!.. கலைவாணரிடம் கடுப்பான அண்ணா!.. பின்னணி இதுதான்!...

by amutha raja |   ( Updated:2023-11-11 17:44:11  )
kalavanar nsk
X

NS Krishnan: கலைவாணர் என அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியில் வல்லவராய் திகழ்ந்தவர். இவர் தனது காமெடியான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர். இவரின் காமெடிக்கென இன்றும் ரசிகர்கள் உண்டு. நாடகங்களில் நல்ல அனுபவம் உள்ளவர்

இவர் ராஜா தேசிங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் தங்க பதுமை, பாரிஜாதம், பூம்பாவை போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது காமெடிகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

இதையும் வாசிங்க:மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…

எம்ஜிஆர் நடிப்பில் இவர் தயாரித்த திரைப்படம்தான் பைத்தியக்காரன். இப்படத்திற்கு பின் கலைவாணர் தனது அடுத்த படத்தை தயாரிப்பது குறித்து நிர்வாகத்திடம் கேட்டார். அப்போது ‘நீங்கள் அடுத்ததாக தயாரிக்கும் திரைப்படத்தில் நீங்களே கதாநாயகனாக நடியுங்கள்’ என்ற ஆலோசனையை இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு கூறியுள்ளனர்.

அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் நான் கதாநாயகனாக நடித்தால் அதை மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என கூறினாராம். அதற்கு கிருஷ்ணன் மற்றும் பஞ்சு வெளிநாட்டில் எல்லாம் அப்படிதானே நடிக்கிறார்கள் என கூறினராம். பின் இவரை ஒரு வழியாய் நடிக்க ஒத்துக்க வைத்துள்ளனர்.

இதையும் வாசிங்க:சிவாஜிகிட்டயே தனது வேலையை காட்டிய சந்திரபாபு… குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான் போல…

ஆனால் இப்படத்திற்கு கதை எழுத இவர் சி.என்.அண்ணாதுரையை தேர்வு செய்தாராம். அறிஞர் அண்ணாவும் இப்படத்திற்கு கதை எழுத ஒத்து கொண்டாராம். பின் அண்ணாத்துரை கதையில் கலைவாணர் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் நல்லதம்பி.

ஆனால் அண்ணாவுக்கு அப்படத்தின் கதையில் அவ்வளவு திருப்தி ஏற்படவில்லையாம். ஏனென்றால் கலைவாணர் இப்படத்தின் கதையில் தனது நாடகத்தின் கதைகளையும் புகுத்தினாராம். இதனால் கோபமடைந்த அண்ணாதுரை கலைவாணர் தனது அடுத்த படத்திற்கு கதை எழுத அண்ணாதுரையை அழைத்தபோது அவர் சம்மதிக்க மறுத்துவிட்டாராம்.

இதையும் வாசிங்க:மிரட்டிய சிவக்குமார்!.. அதிர்ந்துபோன அர்ஜூன்.. அவரு அப்பவே அப்படிதான் போலயே!..

Next Story