பூமர் ஆண்ட்டிஸ் போட்ட கமெண்ட்கள்… ஒரே போஸ்டால் அழுகவிட்ட அசோக்செல்வன்… அப்புடி!
AshokSelvan: கோலிவுட்டின் புது செலிபிரிட்டி ஜோடி அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தான். இவர்கள் திருமண நாள் போஸ்ட்டில் பலரும் கீர்த்தி பாண்டியனின் கலரை விமர்சித்து கருத்துக்களை போட்டு பிரச்னையாக்கினர். இந்த கமெண்ட்களுக்கு தக்க பதிலடியாக அசோக் செல்வன் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இனிது இனிது படத்தின் ஆடிஷனில் ரிஜெக்ட்டானவர் அசோக் செல்வன். பின்னர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர் பல ரிஜெக்ட்களை தாண்டி சூது கவ்வும் படத்தில் நடித்தார். அப்படம் கூட […]
AshokSelvan: கோலிவுட்டின் புது செலிபிரிட்டி ஜோடி அசோக்செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தான். இவர்கள் திருமண நாள் போஸ்ட்டில் பலரும் கீர்த்தி பாண்டியனின் கலரை விமர்சித்து கருத்துக்களை போட்டு பிரச்னையாக்கினர். இந்த கமெண்ட்களுக்கு தக்க பதிலடியாக அசோக் செல்வன் ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.
இனிது இனிது படத்தின் ஆடிஷனில் ரிஜெக்ட்டானவர் அசோக் செல்வன். பின்னர் எஸ்.ஜே.சூர்யாவின் உதவி இயக்குனராக வேலை செய்தார். பின்னர் பல ரிஜெக்ட்களை தாண்டி சூது கவ்வும் படத்தில் நடித்தார். அப்படம் கூட அசோக் செல்வனுக்கு தனி இடத்தினை கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: விட்டா கீழ கழண்டு விழுந்திடும் போல!.. பாதி மூடி பாடாப்படுத்தும் ஐஸ்வர்யா லட்சுமி..
அடுத்து அவர் நடித்த தெகிடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நல்ல ரீச்சை பெற்றார். தொடர்ச்சியாக அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தனித்துவமான கதையாக அமைந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான போர்த்தொழில் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சமீபத்தில் இவர் நடிகையும், அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படத்தினை அசோக் செல்வன் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார். அந்த பதிவில் பல பெண்களே கீர்த்தியின் கலர் சரியில்லை, அழகு இல்லை என கமெண்ட் தட்டினர்.
இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!
இதை பார்த்த பலரும் அவர் வாழ்க்கை நீங்களாம் ஏன் இப்படி பூமர் வேலை பார்க்குறீங்க என ஆதரவு பதிவுகளையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் ரிசப்ஷனில் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்ட அசோக் செல்வன், உலகத்திலேயே ரொம்ப அழகான பெண்ணுடன் என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் பேசிய வாயெல்லாம் அடிச்சிட்டீங்க என கமெண்ட்கள் பறந்து வருகிறது.
தும்பா படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியானவர் கீர்த்தி பாண்டியன். ஒன் வுமன் ஷோவாக அவர் நடிப்பில் வெளியான அன்பிற்கினியாள் திரைப்படம் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் கமெண்ட்களே பெற்றது குறிப்பிடத்தக்கது.