அதான பழக்கதோஷம் போகுமா? ஜவான் இந்த தமிழ் படத்தின் காப்பி தானா? திருந்தாத அட்லீ!

Atlee copycat: தமிழ் சினிமா இயக்குனர்களில் பலர் பல விதங்களில் அறியப்படுபவர். ரீமேக், வன்முறை, செண்டிமெண்ட் என இயக்குனர்களுக்கு தனி அடையாளம் இருக்கும். ஆனால் தன்னுடைய எல்லா படத்துக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு படத்தின் காப்பி தான் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் சினிமா எண்ட்ரியானவர். அந்த படம் மௌன ராகம் படத்தின் காப்பி என கிசுகிசுக்கள் எழுந்தது. நீங்கபாட்டுக்கும் பேசுங்க என அவர் இருக்க, படம் அமோக வசூல் […]

By :  Akhilan
Update: 2023-09-07 04:43 GMT

Atlee copycat: தமிழ் சினிமா இயக்குனர்களில் பலர் பல விதங்களில் அறியப்படுபவர். ரீமேக், வன்முறை, செண்டிமெண்ட் என இயக்குனர்களுக்கு தனி அடையாளம் இருக்கும். ஆனால் தன்னுடைய எல்லா படத்துக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒரு படத்தின் காப்பி தான் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் அட்லீ.

ராஜா ராணி படம் மூலம் சினிமா எண்ட்ரியானவர். அந்த படம் மௌன ராகம் படத்தின் காப்பி என கிசுகிசுக்கள் எழுந்தது. நீங்கபாட்டுக்கும் பேசுங்க என அவர் இருக்க, படம் அமோக வசூல் படைத்தது. முதல் பாலே செம சிக்ஸராக அட்லீயை தன்னுடைய அடுத்த பட இயக்குனராக்கினார் விஜய்.

இதையும் படிங்க: ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் இறங்கி செய்த வேலை!… என்னய்யா அம்புட்டு பாசமா?..

அவரின் தெறி படத்தை அட்லீ இயக்கினார். படம் ரிலீஸாகி அமோக வசூலை தட்டி தூக்க இந்த படத்த ஏங்கையோ பார்த்த மாதிரி இருக்கே என யோசிக்க அட நம்ம விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படம் என மொத்தமாக கண்டுபிடித்தனர். இதுவும் காப்பி தானா என அவரை கலாய்க்க வசூல் என்னவோ அமோகம்.

அடுத்து தன்னுடைய மெர்சல் படத்தினை இயக்க அட்லீக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் விஜய். அப்பா, இரண்டு மகன் என விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார். படம் ரிலீஸாக வசூல் எப்போதும் போல கல்லா கட்ட இந்த முறையும் தமிழ் படமான அபூர்வ சகோதரர்களின் பக்கா காப்பி என ரசிகர்கள் விமர்சித்தனர்.

நடிகர் கமல்ஹாசன் அந்த டீமை கூப்பிட்டு பாராட்டி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டார். பின்னாடி பெரிய அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டரை ஒட்டி வைத்து இருந்தது. பெரிய விமர்சனமாக மாறியது. அடுத்தும் அசராத விஜய் தன்னுடைய பிகில் படத்தினை இயக்கும் வாய்ப்பு கொடுத்தார்.

தமிழுல பிடிச்சா தான் கண்டுபிடிச்சி திட்டுறாங்கனு ஹாலிவுட்டில் பெயர் தெரியாத ஒரு படத்தில் இருந்து அப்பட்டமாக பல காட்சிகளை அப்படியே பிகில் படத்தில் படமாக்கி இருந்தார். நாங்க யாருனு ரசிகர்கள் அதை கண்டுபிடிச்சு இந்த முறை வீடியோவுடன் வச்சு செய்தனர். போங்கப்பா கோலிவுட்டே வேண்டாம். நான் பாலிவுட் போறேனு போய் ஷாருக்கானை வைத்து படம் எடுத்தார்.

இதையும் படிங்க: நீ போ நான் இப்போ வர முடியாது… கறாராக தளபதி68 டீமை கழட்டிவிட்ட தளபதி…

பெரிய தமிழ் கூட்டமே இணைந்து உருவாக்கிய ஜவான் படம் இன்று திரையரங்குக்கு வந்திருக்கிறது. முதல் சில காட்சிகள் பெரிய வரவேற்பை பெற அடுத்தடுத்த ஷோக்களில் இந்த படத்தினை எங்கையோ பார்த்த பீல் வந்ததையடுத்து இந்த ஜவான் படம் தமிழில் ரமணா படத்தின் காப்பி தான் என்ற தகவல்கள் தெரிவிக்கிறது. அடபாவி!

Tags:    

Similar News