ராதிகாவுக்கு இந்த கேரக்டர் தான் செம மேட்ச் ஆகுது போல… கரை சேருவாரா பாக்கியா..?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியிடம் தன்னுடைய நிலைமை சொல்லி அழுதுக்கொண்டு இருக்கிறார் செழியன். இதைப் பார்த்து கவலைப்படும் பாக்கியா ஜெனியிடம் பேச நினைக்கிறார். இதனை அடுத்து அவருக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்புகிறார். அதில் எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை ஜெனி. யாரா இருந்தாலும் நீ செஞ்சது தான் செஞ்சிருப்பாங்க. அமைதியா இரு. எல்லாம் சரியாகும், பிள்ளைய அம்மாவ கவனிச்சிக்கோ எனச் ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட ஜெனிக்கு கண்ணீர் வருகிறது. இதையும் படிங்க: அத்தனை […]
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபியிடம் தன்னுடைய நிலைமை சொல்லி அழுதுக்கொண்டு இருக்கிறார் செழியன். இதைப் பார்த்து கவலைப்படும் பாக்கியா ஜெனியிடம் பேச நினைக்கிறார். இதனை அடுத்து அவருக்கு ஒரு ஆடியோ மெசேஜ் அனுப்புகிறார்.
அதில் எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்லை ஜெனி. யாரா இருந்தாலும் நீ செஞ்சது தான் செஞ்சிருப்பாங்க. அமைதியா இரு. எல்லாம் சரியாகும், பிள்ளைய அம்மாவ கவனிச்சிக்கோ எனச் ஆறுதல் சொல்கிறார். இதை கேட்ட ஜெனிக்கு கண்ணீர் வருகிறது.
இதையும் படிங்க: அத்தனை பிரபலங்களும் பாராட்டுறாங்க!.. ஆனாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வசூல் இவ்ளோ தானா?..
இதனை அடுத்து எழிலும், பாக்கியாவும் பழனிசாமியை சந்திக்கின்றனர். அவர் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக கூறி அப்ளே செய்ய சொல்கிறார். இதை கேட்டு சந்தோஷம் அடையும் பாக்கியா கண்டிப்பாக செய்வதாக கூறுகிறார். இதை வீட்டில் வந்து அங்கிருப்பவர்களிடம் சொல்கிறார்.
ஈஸ்வரி இதெல்லாம் தேவையா என மீண்டும் அவரை மட்டம் தட்டுவது போல பேசுகிறார். அப்போ அங்கு கோபி வர அவரிடம் இதை கூறி கேட்கிறார் ஈஸ்வரி. கோபியும் வீரத்துடன் பேச தொடங்க அங்கு வந்து விடுகிறார் ராதிகா. பிசினஸ் பத்தி சொல்லிட்டு இருந்ததாக கூறுகிறார்.
இதையும் படிங்க: மாயா, பூர்ணிமாவை கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் தாத்தா!.. அட பின்னாடி தட்டோட நிக்கிறது யாருன்னு பாருங்க!..
உடனே ராதிகா நம்ம பிசினஸே தண்ணீல முழ்கிக்கிட்டு இருக்கு இதெல்லாம் தேவையா என்கிறார். அப்போ எல்லாரும் சிரிக்க ஈஸ்வரி கட்டுன புருஷனை பேசுற எனக் கேட்க அப்பா அவர் என் புருஷனு ஒத்துக்கிட்டீங்களே என பதிலடி கொடுக்கிறார்.
அடுத்த நாள் அந்த காண்ட்ராக்ட் விஷயமாக எழிலுடன் பாக்கியா கிளம்புகிறார். அப்போது ஈஸ்வரி மட்டம் தட்டும் விதமாக பேச ராமமூர்த்தி வாயை அடைக்கிறார். அவரே நீ ஜெயிப்ப பாக்கியா, நம்பிக்கையோட போயிட்டு வா என வாழ்த்து சொல்லி அனுப்புகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.