பிக்பாஸ் கேப்டன் முதல் நாமினேட் போட்டியாளர்கள் வரை... அடுத்த வாரம் பிக்பாஸில் நடக்க போவது என்ன?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் அடுத்த வாரம் நடக்க இருக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகள்
Bigg Boss Tamil: பிக்பாஸில் வரும் வாரம் நடக்க இருக்கும் டாஸ்க் மற்றும் நாமினேஷன் குறித்த சுவாரஸ்ய அப்டேட்ஸ் கசிந்து இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் ஒவ்வொரு வாரமும் களைக்கட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பு அதிகமாகி கொண்டுள்ளது. ராஜா, ராணி டாஸ்கில் ஆரம்பித்த சண்டை ஏஞ்சல் மற்றும் டீமன் டாஸ்கில் பிரச்சனை பத்திக்கொண்டது.
அடுத்தது, யூனியன் மற்றும் முதலாளி டாஸ்கில் அருண் மற்றும் முத்து மோதல் அதிகமாக பற்றிக்கொண்டது. இதனால் வார இறுதியில் விஷயம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அருண் நிகழ்ச்சியில் பேசிய விஷயத்தை விஜய் சேதுபதி மடை மாற்றுவதாக குறைப்பட்டு கொண்டார்.
இதனால் கடுப்பான விஜய் சேதுபதி டிவியில் வராமல் ஆடியோ மூலமாக பேசி அவருக்கு கொட்டு வைத்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்யாவும், முடிவில் தர்ஷிகாவும் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் ஃபேக்டரி டாஸ்க் நடத்தப்பட இருக்கிறதாம். சீசன் 6ல் நடந்த டாஸ்க் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இந்த வாரமும் கன்டென்ட் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் விஜே விஷால் வரும் வாரம் கேப்டனாக செயல்பட இருக்கிறாராம்.
மேலும், முத்து, அருண், ரஞ்சித், தீபக், ரானவ், ராயன், ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி, சவுந்தர்யா, அன்சிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.