வலியில் கதறிய ரானவ்… மனசாட்சி இல்லாமல் ஜெப்ரி செய்த செயல்… நீங்களாம் மனுஷங்கதானா?
பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியின் அப்டேட்
Biggboss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கன்வேயர் பெல்ட் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் போட்ட ரானவுக்கு கையில் அடிப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கு சக போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம் தற்போது இணையத்தில் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முரட்டுத்தனமான டாஸ்க் நடப்பது வழக்கம் தான். அப்படி நடக்கும்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் இத்தகைய போட்டியில் சக போட்டியாளர்கள் அடிப்படை போது அவர்களுக்கு உடன் இருப்பவர்கள் ஓடி சென்று உதவுவதை தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.
அடிபட்ட நேரத்தில் போட்டியை நிறுத்திவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதுவும் வலி இருக்கிறதா மருத்துவமனை செல்ல வேண்டுமா என கேள்விகளை பார்த்து வந்த பிக் பாஸ் வீடு இன்றைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை பார்த்திருக்கிறது. இந்த வாரத்தில் கன்வேயர் பெல்ட் டாஸ்க் சற்று நேரத்துக்கு முன்னர் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஆரஞ்சில் சவுந்தர்யா, அருண், விஷால், பிங்க் அணியில் ஜெப்ரி, அன்ஷிதா, பவித்ரா, ப்ளூ அணியில் மஞ்சரி மற்றும் ரானவ், கருப்பு அணியில் முத்துக்குமரன் மற்றும் தீபக், யெல்லோ அணியில் ரஞ்சித், ஜாக்குலின், ராயன் உள்ளனர்.
தொடர்ந்து, பேட்டி தொடங்கியது இதில் பவித்ராவிடம் பறிக்க ரானவ் முயற்சி செய்தபோது அவரை ஜெஃப்ரி அழுத்திப் பிடித்ததில் கையில் முறிவு ஏற்பட்டது. ஆனால் வலியில் ரானவ் துடித்துக் கொண்டிருக்கும் போது விஷால் மற்றும் அருணை தவிர மற்ற அனைவரும் அவர் நடிப்பதாக பேசிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் மற்ற போட்டியாளர்களை அமைதியாக இருக்கும்படி, இதெல்லாம் சும்மா என ஜெஃப்ரி சைகை காட்டுவது மேலும் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்தை தொடர்ந்து ரானவ் மருத்துவ அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கும் நிலையில் அன்சிதாவை தவிர மற்ற போட்டியாளர்கள் கவலை கொண்டதாக தெரியவில்லை. அதிலும் சௌந்தர்யா அடிபட்டா ஓகே தான் என பேசுவது மேலும் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் இணையத்தில் பதிவுகள் குவிந்து வருகிறது.