கையை உடைச்சிக்கிட்டது உன் தப்பு.. ராணவிடம் திமிராக பேசும் சவுந்தர்யா… இதெல்லாம் நியாயமே இல்ல?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புரோமோக்களின் அப்டேட்கள்

By :  Akhilan
Update: 2024-12-17 08:51 GMT

பிக் பாஸ் தமிழ் 

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில், போட்டியாளர் ரானவின் கை முறிவுக்கு கூட பாப்புலாரிட்டி தேடிக் கொள்ளும் சவுந்தர்யாவின் பேச்சு ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய போட்டிக்கான டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் போட்டியாளர் ரானவ் விழுந்து அவரின் கையில் அடிபட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இது குறித்த முதல் ப்ரோமோ இன்று காலை வெளியானது.

இதில் கீழே விழும் ரானவ் வலியால் அழுது கொண்டிருக்கிறார். துரிதமாக செயல்பட்ட அருண் பிரசாத் அவரை உடனே கன்வர்சன் ரூம்மிற்குள் அனுப்பி வைக்கிறார். ஆனால் வெளியில் அமர்ந்திருக்கும் சவுந்தர்யா நடிப்பதாக கூறுகிறார்.

அவருடன் இணைந்து கொண்டு ஜெஃப்ரியும் அவன் விழுந்தது இன்னொரு மாதிரி ஆனால் கையில் அடிபட்டு விட்டதாக அவன் அழுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் பிக் பாஸ் ரானவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருப்பதாக அறிவிக்கிறார்.

இதைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்து உள்ளே வந்திருக்கும் போட்டியாளர் ரானவ் குறித்து எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே அன்ஷிதா நானும் தவறாக நினைத்து விட்டதாக கூறி மன்னிப்பு கேட்கிறார். இதைத்தொடர்ந்த அழுகும் அவரை தீபக் சமாதானம் செய்கிறார்.

தொடர்ந்து எழுந்து பேசும் சவுந்தர்யா, நான் இந்த விஷயம் நடக்கும் போது நீ தெரிவதற்காக பண்றியோ என நினைத்தேன் என்கிறார். இதனால் கோபம் கொள்ளும் ரானவ் தெரிவதற்காக நான் எதுவும் பண்ணவில்லை என பேச இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து பாத்ரூமில் நின்று பேசிக் கொண்டிருக்கும் சவுந்தர்யா, ஜெஃப்ரிடம் நான் அவனிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. நீ விழுந்து அடிபட்டச்சின்னா அது உன்னோட தப்பு என திமிராக பேசுவது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னுடைய சக போட்டியாளர் அடிபட்டு மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுரைக்கு பின்னரும் கூட மனிதாபிமானம் இல்லாமல் சவுந்தர்யா பேசுவது திமிராக தெரிவதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News