பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க்கில் சிக்கி வெளியேறிய பெண் போட்டியாளர்... இதுக்கு தானே இவ்வளவு திட்டமும்?
Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பணப்பெட்டி டாஸ்கில் எதிர்பாராத வகையில் தற்போது எலிமினேஷன் ஒன்று நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. பினாலே வாரத்தில் கடந்த வாரத்திலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து இறுதிப் போட்டியில் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசி வருகின்றனர்.
ஆனால் கடந்த வாரமே உள்ளே வந்த போட்டியாளர்கள் ஆட்டத்தின் போக்கை தேவையை இல்லாமல் மாற்றி அமைத்ததாக ரசிகர்களிடம் அதிருப்தி நிலவியது. இதைத்தொடர்ந்து வார இறுதியில் விஜய் சேதுபதி அவர்களை கண்டித்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வரும் என போட்டியாளர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் ஆனால் பிக் பாஸ் டீம் அதில் தான் பெரிய திருப்பத்தை வைத்தது. பணப்பெட்டியை எடுக்கும் போட்டியாளர்கள் வீட்டிற்குள்ளே இருக்கலாம்.
ஆனால் எளிதாக போய் பெட்டியை எடுத்து வந்து விட முடியாது. ஒரு குறிப்பிட்ட மீட்டர் தூரம் ஓடி சென்று வீட்டின் கதவு மூடுவதற்குள் பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே வரவேண்டும். அப்படி எடுத்து வரும் போட்டியாளர்களுக்கு அந்த பணத்தொகை அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படும்.
இப்படி தொடங்கப்பட்ட டாஸ்கில் முத்துக்குமரன் 30 மீட்டர் தூரம் 15 நொடிக்குள் ஓடி 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்தார். அதை தொடர்ந்து ரயான் 2 லட்சத்துக்காக ஓடி வெற்ரிகரமாக வீட்டிற்குள் வந்தார். விஜே விஷால் கூட ஓடிச்சென்று பணப்பெட்டியை எடுத்து வந்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் இப்படி நடக்கும் போது கண்டிப்பாக ஒரு போட்டியாளர்கள் மிஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிலும் பெண் போட்டியாளர்களுக்கே ஆப்பு என நினைத்தனர். முதலில் ஓடிய சவுந்தர்யா பாதி வழியிலே வீட்டிற்குள் திரும்பி விட்டார். அதை தொடர்ந்து ஜாக்குலின் ஓடி இருக்கும் நிலையில் வீட்டிற்குள் வர முடியாமல் வீட்டின் கதவு மூடியதால் அவர் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதை தொடர்ந்து ரயான் மற்றும் சவுந்தர்யா கதவை தட்டி திறக்க சொல்லி அழுததாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த விவகாரங்கள் இன்று ஒளிபரப்பாகலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை 15 நாமினேஷனில் இருந்த ஜாக்குலின் எலிமினேஷனிலும் ஹிஸ்டரி படைத்துவிட்டே வெளியேறி இருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.