உன் கூட நடிக்கணுமா? அப்படி ஒரு படமே வேணாம்… பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளரை வச்சி செய்த விஜய் சேதுபதி
Biggboss Tamil: நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளரை கலாய்த்து இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் முழுவதுமாக இல்லாமல் இருந்து இருக்கிறார். இதற்கு பிக்பாஸ் அல்டிமேட்டில் அவர் பாதியிலேயே வெளியேற அவருக்கு பதில் நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க வந்தார்.
அது போல இந்த முறை கமல்ஹாசன் விலகிய போது யார் அந்த இடத்திற்கு வருவார்கள் என பல கேள்விகள் நிலவியது. சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டது. ஆனால், கடைசியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வந்தார்.
அந்த வகையில் அவர் சரியாக இருப்பாரா என்ற சந்தேகமே முதலில் இருந்தது. இருந்தும் அதை சரிக்கட்டும் விதமாக முதலில் பாலில் இருந்து அடித்து ஆடும் விதமாக இண்ட்ரோ வீடியோவிலேயே போட்டியாளர்களை வரிந்து கட்டி கலாய்த்தார்.
இதை யாரும் எதிர்பார்க்காத நிலையில், அட நல்லா இருக்கே என பலரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் சில வாரங்களில் போட்டியாளர்களின் ரசிகர்கள் தங்கள் ஃபேவரிட்டை கலாய்த்தால் விஜய் சேதுபதியையே விமர்சிக்க தொடங்கினர்.
அந்த வகையில் அவருக்கு சில நெகட்டிவ் இமேஜுகளும் உருவானது. இருந்தும் பல கட்ட பிரச்னைகளை தாண்டி விஜய் சேதுபதி வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். சீசனின் பினாலே எபிசோட் நேற்று ஒளிபரப்பானது.
இதில் எலிமினேட்டான போட்டியாளர்கள் விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பினர். அதில் ரானவ் எங்ககிட்டேந்து நீங்க என்ன கத்துக்கிட்டீங்க சார் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, வாரா வாரம் நம்ம பேசும்போது என்ன கேள்வி கேட்க போறோம். என்ன பதில் சொல்ல போறோம் தெரியாது.
அந்த இடத்துல டக்குனு பேச கத்துக்கிட்டேன். அதுமட்டுமில்லாம, என்னோட சொந்த விருப்பு வெறுப்ப தாண்டி உங்க எல்லார்கிட்டையும் பொறுமையா பேச கத்துக்கிட்டேன் என்றார். மேலும், சவுந்தர்யா பிஆர் பத்தி பேசுறாங்க. உங்க பிஆர் பத்தி பேசிட்டீங்களா எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ரானவ் ஆ சொல்லிட்டேன் சார். என் பிரண்ட் ஒருத்தர் செஞ்சதா சொல்லிட்டேன் என்கிறார். தொடர்ந்து, விஜய் சேதுபதி நல்லா பேசுறீங்க. எதிர்காலத்துல உங்க கூட நடிக்க வாய்ப்பு வந்தா என இழுக்க எல்லாரும் கைதட்டி ஆரவாரம் வைத்தனர்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அப்படி ஒரு படமே வேணாம்னு வேற வேலை தேடி போய்டுவேன் என ஓட்டி இருக்கிறார். அவர் விளையாட்டாக சொன்னாலும் ரானவ் ரசிகர்களோ, பிஆர்ரோ அந்த வீடியோவை வைரலாக்கி விஜய் சேதுபதியையே விமர்சித்து வருகின்றனர்.